அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

அன்வாருல் இஸ்லாம் கலாச்சார சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்பு


16/12/2012  ஞாயிறு மாலை 4.00 மணியளவில் அன்வாருல்  இஸ்லாம் கலாச்சார சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும்  உறுப்பினர்கள் கலந்து கொண்ட சந்திப்பு நிகழ்ச்சி சகோதரர் M.சேக் மைதீன் அவர்கள் தலைமையில் லெப்பை அப்பா பள்ளிவாசலில் நடைபெற்றது, கூட்டத்தின் முடிவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


  1. இதுவரை செயல்பாடில்லாமல் இருந்து வந்த சங்கத்தை சமுக நலன் கருதி புதிய நிர்வாகிகளின் கீழ் செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது. 
  2. சங்க வளர்ச்சிக்கு தேவையான நிதி ஆதாரங்கள்  குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. 
  3. சங்கத்தின் ஆவணங்கள் முன்னாள் நிர்வாகிகளிடம் இருந்து முறைப்படி ஒப்படைக்க கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது 
  4. நமது சங்கத்திற்காக வாங்கிய மணை  ஆவணங்கள் குறித்து  சரிபார்க்கப்பட்டது.
  5. சங்கம் இனி தொய்வில்லாமல் நடைபெற புதிய நிரவாகிகள் தேர்வு செய்ய மூத்த உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 
     H.யுசுப்ஷா. (நலம்)
    M.ஷேக் மைதீன். (நாச்சியார் எலெக்ட்ரிகல்ஸ்)
    V.சாகுல் ஹமீது. (S/O வாப்பு மரைக்காயர்)
    A.சாகுல் ஹமீது. (சேட்டு)
    A.அஹமதுல்லா. (தமுமுக தலைவர்) 
    M.சுல்தனுல் ஆரிப்(MTC)
    M.சேக் முஹாபிரின்.
    M.இஸ்மத் இனுன். (வி.கேர்)
    A.ரசூல் முகமது. (சீசன்)
  6. மாவட்ட திட்ட அலுவலரிடம் இருந்து வந்த மணு பெற்றுக்கொள்ளப்பட்டு, புதிய நிர்வாக தேர்வுக்குப் பின் பரிசீலிக்க முடிவு செய்யப்பட்டது. 
  7. சங்கத்தின் நிறை,குறைகளையும்,கருத்துகளையும் புதிய நிர்வாகம் அமையும் வரை 9 நபர் கொண்ட குழுவிடம் பகிர்ந்து கொள்ளும்மாறு அணைத்து முன்னாள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. 
  8. இன்ஷா அல்லாஹ் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது.
  9. நிர்வாகிகள் தேர்வு 20/01/13 அன்று நடத்த தீர்மானிக்கப்பட்டது.
  10. மேல் கண்ட தீர்மானங்களை நமது சகோதர அமைப்புகளுக்கும் முன்னாள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 
  11.  சகோதரர் சாகுல் ஹமீது நன்றி கூறி துஆ ஓத கூட்டம் இனிதே நிறைவுற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக