அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

டாக்டர். ஹாஜி அப்துல் சலாம் வேதாரண்யம் வருகை



தோப்புத்துறை குறும்படம் வெளியீடு!


தோப்புத்துறை குறும்படம் வெளியீடு

ஜூன் .19

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள கடலோர ஊரான தோப்புத்துறையில் நெய்தல் நிலமும்,மருதம் நிலமும் சூழ்ந்த அழகிய பகுதியாகும்.

தோப்புக்குள் ஊர் இருப்பதும், துறைமுகம் பின்னணியும் இவ்வூருக்கான பெயர் சிறப்பாகும்.

அமீரக விசா வைத்திருப்போர் ஜூன்-1 முதல் அமீரகம் திரும்பலாம்; நுழைவு அனுமதி பெறுவது எப்படி?

அமீரக விசா வைத்திருப்போர் ஜூன்-1 முதல் அமீரகம் திரும்பலாம்; நுழைவு அனுமதி பெறுவது எப்படி?

கொரோனா வைரஸ் காரணமாக விமான சேவை முடக்கப்பட்டதால் செல்லுபடியாகும் அமீரக விசா வைத்திருந்தும் அமீரகத்திற்குள் வர முடியாமல் சொந்த நாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். அத்தகையவர்கள் வரும் ஜூன்-1 முதல் மீண்டும் அமீரகம் திரும்ப, அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான கூட்டாட்சி ஆணையம் (ICA) ஏற்பாடு செய்துள்ளது.

செல்லுபடியாகும் அல்லது தற்போது காலாவதியான அமீரக விசா வைத்திருப்பவர்கள் மீண்டும் அமீரகம் வருவதற்கு இணையவழியாக நுழைவு அனுமதி பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அமீரகத்தில் குடும்பத்தினர் இருப்பவர்கள் மட்டும் நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது நாட்டிற்கு வெளியே உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? 

இந்த ( https://beta.smartservices.ica.gov.ae/echannels/web/client/guest/index.html#/issueResidentEntryPermission/request/708/step1?administrativeRegionId=1&withException=false ) இணைப்பில் உள்ள விண்ணப்பத்தில் உங்கள் விவரங்களை உள்ளீடு செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.

என்ன ஆவணங்கள் தேவை?

* உங்களின் வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
    
* அமீரக ரெஸிடண்ட் விசா நகல்
    
* பாஸ்போர்ட் நகல்
 
* எதற்காக நீங்கள் அமீரகத்தில் இருந்து வெளிநாடு சென்றீர்கள் என்பதற்கான அத்தாட்சி (உங்கள் பணி நிறுவந்திடமிருந்து பெற்ற கடிதம் அல்லது விமான டிக்கெட்)

* அமீரகம் வருவதற்கான விமான டிக்கெட் (கட்டாயமல்ல)

கட்டணம்: இல்லை

உங்கள் சுய விவரம் மற்றும் ஆவணங்களுடன் சமர்ப்பித்த விண்ணப்பத்தை உறுதிசெய்யும் பொருட்டு உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும் வரை காத்திருக்கவும்.

உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான உறுதி மின்னஞ்சல் வந்தவுடன், நீங்கள் அமீரகம் வருவதற்கான விமான பயனச் சீட்டை பதிவு செய்யலாம்.

அனுமதி பெறுவதை எப்படி டிரக் செய்வது??? 

https://beta.smartservices.ica.gov.ae/echannels/web/client/guest/index.html#/applicationTracking

ENTRY PERMISSION Register Link >> 

https://beta.smartservices.ica.gov.ae/echannels/web/client/guest/index.html#/issueResidentEntryPermission/request/708/step1?administrativeRegionId=1&withException=false

Application Tracking Link >> 

https://beta.smartservices.ica.gov.ae/echannels/web/client/guest/index.html#/applicationTracking

தோப்புத்துறையின் 'சிங்கம்' சி.சா

தோப்புத்துறையின் 'சிங்கம்' சி.சா
( மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் வாட்ஸ் அப் அறிக்கை )
தோப்புத்துறையின் முகவரிகளில் ஒருவராக திகழ்ந்த ஜனாப் . சி . சாகுல் ஹமீது அவர்கள் இன்று இறைவனிடம் சேர்ந்திருக்கிறார் . ( இன்னா லில்லாஹி ... )

அரபா நோம்பின் பயன்!

அரஃபா நோன்பு நோற்றால், *அல்லாஹ்* கடந்த வருட பாவங்களையும்,  வரும் வருட பாவங்களையும் மண்ணித்து விடுவான்.

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثٌ مِنْ كُلِّ شَهْرٍ وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ فَهَذَا صِيَامُ الدَّهْرِ كُلِّهِ صِيَامُ يَوْمِ عَرَفَةَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ وَالسَّنَةَ الَّتِي بَعْدَهُ وَصِيَامُ يَوْمِ عَاشُورَاءَ أَحْتَسِبُ عَلَى اللَّهِ أَنْ يُكَفِّرَ السَّنَةَ الَّتِي قَبْلَهُ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அரஃபா நாள் நோன்பு அதற்கு முந்திய ஆண்டு மற்றும் அதற்குப் பிந்திய ஆண்டு பாவங்களுக்குப் பரிகாரமாகும். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல் : முஸ்லிம் 1976

ரியோ பாராலிம்பிக் : தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார் !

ரியோவில் நடந்துவரும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் உயரம் தாண்டும் பிரிவில், இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரரான வருண்சிங் பாடி 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெணகலப் பதக்கம் வென்றார். ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கமும் இதுவே.

உயர்ந்தது டீசல் விலை; எகிறியது ஆம்னி பஸ் கட்டணம்!


’பக்ரீத்’: ஒட்டகம் வெட்டப்படுகிறதா என கண்காணிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


தமிழகத்தில் ஒட்டகம் வெட்ட உரிய வசதிகள் செய்துதரக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ஒட்டகம் வெட்டுவதற்கு விதிக்கபட்ட தடை தொடரும் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.