அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

NEWYEAR அன்று நீங்க சிங்கபூர்ல இருக்கிங்களா இத கொஞ்சம் படிங்க


கண்ட இடங்களில் குப்பை போடுவோர் வரும் புத்­தாண்டு தினத்­தன்று கூடுதல் எச்­ச­ரிக்கை­யு­டன் இருக்­க­வேண்­டும் என்று தேசிய சுற்­றுச்­சூ­ழல் முகவை அறி­வு­றுத்தி உள்ளது.

புத்­தாண்டை வர­வேற்க லிட்டில் இந்தியா, மரினா பே, ஆர்ச்­சர்ட் சாலை போன்ற சிங்கப்­பூ­ரின் முக்கிய இடங்களில் அதிகக் கூட்டம் எதிர்­பார்க்­கப்­படு­கிறது. அதனால் புத்­தாண்­டிற்கு முதல் நாள் இந்த முக்கிய இடங்களில் தேசிய சுற்­றுச்­சூ­ழல் முகவை­யின் குப்பை போடு­வதைத் தடுக்­கும் அம­லாக்­கப் பிரிவு அதன் நட­வ­டிக்கை­களைத் துரி­தப்­படுத்த உள்ளது.
புத்­தாண்டு தினக் கொண்டாட்­டங்கள் நடை­பெ­ற­வுள்ள சிங்கப்­பூ­ரின் 10 முக்கிய இடங்களில் கிட்­டத்­தட்ட 157 அம­லாக்க அதி­கா­ரி­களை தேசிய சுற்­றுச்­சூ­ழல் முகவை சிறப்பு கண்­கா­ணிப்­புச் சோதனைப் பணியில் அமர்த்­தும். இதற்கு முந்திய ஆண்டில் இந்த சிறப்­புப் பணிக்கு அமர்த்­திய அதி­கா­ரி­களின் எண்­ணிக்கையை­விட இது 20% அதிகம்.
குறிப்­பாக 40க்கும் மேற்­பட்ட அதி­கா­ரி­கள் மரினா பே வட்­டா­ரத்­தில் நடை­பெ­றும் புத்­தாண்­டுக் கொண்டாட்ட நிகழ்ச்­சி­களைக் கண்­கா­ணிக்க ரோந்து மேற்­கொள்­வார்­கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக