அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

இளம்வயதினரை விரும்பி கடிக்கும் கொடுக்கல் : ஆய்வில் தகவல்

 
மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது.

விடைபெற்றார் பெரியார்தாசன்

நாடறிந்த நாவலர் பெரியார்தாசன் அவர்கள் இவ்வுலகை விட்டு விடைபெற்றார் என்ற செய்தி அனைவரையும் உலுக்கி இருக்கிறது.
Photo: விடைபெற்றார் பெரியார்தாசன்

நாடறிந்த நாவலர் பெரியார்தாசன் அவர்கள் இவ்வுலகை விட்டு விடைபெற்றார் என்ற செய்தி அனைவரையும் உலுக்கி இருக்கிறது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் நான் தஞ்சை பேருந்து நிலையத்தில் இருந்தபோது இச்செய்தியை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி தம்பி நபில் அவர்கள் அலைபேசி வழியாக என்னிடம் கூறினார்.

கடந்த ஒரு மாதமாக அவர் கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கும் செய்தியை நான் வெளிநாட்டில் இருந்தபோது அறிந்தேன். நேற்று மாலை நான் மதுரையில் இருந்தபோது அவருடைய குழுமத்தை சார்ந்த இப்ராஹிம் காசிமி அவர்கள் அவர் இறுதிக் கட்டத்தை எட்டும் நிலைக்கு போய்க் கொண்டிருப்பதாகவும், துஆ செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

நேற்று நள்ளிரவு அவரது உடல்நலம் குறித்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் எனக்கு குறுந்தகவல் அனுப்பினார். நான் அவரிடம் பேசியபோது, நிலைமை மோசமாக இருப்பதாக கவலைப்பட்டார். இதையறிந்த நானும், தலைவர் ஜே.எஸ்.ஆர் உட்பட பலரும் மிகுந்த வேதனை அடைந்தோம்.

வேலூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் பிறந்த பெரியார்தாசன், உயர்சாதி சமூகமான முதலியார் சமுகத்தைத்தைச் சேர்ந்தவர். இளம் காலம் முதல் முற்போக்கான சிந்தனைகளில் மூழ்கினார். மார்க்ஸிஸம், பெரியாரிசம், அம்பேத்காரிசம் என தனது வாசிப்பை மெருகேற்றிக் கொண்டார்.

பெரியாரை சந்தித்த பிறகு தனது இயற்பெயரரான சேசாசலம் பெரியார்தாசனாக மாற்றிக் கொண்டார். தொடர்ந்து மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், சாதிய கொடுமைகளுக்கு எதிராகவும், ஆரிய சூழ்ச்சிகளுக்கு எதிராகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். மேடைகளில் சென்னை தமிழில் பலமணி நேரம் பேசி வெகுமக்களை ஈர்த்தார். கோபம், நகைச்சுவை என பல்வேறு அம்சங்களோடு அவரது உரைவீச்சு இருக்கும். பெரியாரிசத்தை பல்வேறு தளங்களில் மக்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்த்ததில் அவரது பங்கு முதன்மையானது. தொடர்ந்து மதங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார். அம்பேத்கரின் கூற்றுகளை ஆய்வுசெய்து தன்னை பௌத்தராக அறிவித்துக் கொண்டார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவத்துறை பேராசிரியராகப் பணியாற்றிய அவர் ஒரு நடமாடும் நூலகமாகத் திகழ்ந்தார். கவிஞர் வைரமுத்து போன்ற எண்ணற்ற பிரபலங்கள் இவரது மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 1996ல் தான் எனக்கு அறிமுகமானார். நான் சென்னை புதுக்கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது எனது தமிழ் பேராசிரியர் மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்கள் "தேனீக்கள்" என்ற மாணவர் அமைப்பைத் தோற்றுவித்தார். இலக்கியம் முற்போக்கு தளங்களில் இயங்கிய மாணவர்கள் அதில் ஒருங்கிணைக்கப்பட்டனர். அப்போது தேனீக்கள் சார்பில் நாங்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு அவரை அழைத்திருந்தோம். அப்போதுதான் பாரதிராஜாவின் கருத்தம்மா திரைப்படத்தில் நடித்திருந்தார். நாங்கள் வெகுஜன மாணவர்களை ஈர்ப்பதற்காக ‘கருத்தம்மா’ புகழ் பெரியார்தாசன் பேசுகிறார் என அழைப்பிதழை அச்சடித்தோம். இதை மேடையில் குறிப்பிட்ட அவர், எத்தனையோ பணிகளை ஆற்றிடிருகிறேன். ஒரு சினிமாவில் நடித்ததை வைத்து என்னை அடையாளப்படுத்துகிறீர்களே என்று செல்லமாக கோபித்துக்கொண்டர் அவரது அற்புதமான பேச்சில் "தேனீக்கள்" சுறுசுறுப்படைந்தனர்.

அதன்பிறகு அவ்வளவாகத் தொடர்பில்லை.பிறகு 2002 எனக் கருதுகிறேன். எங்களது வழிகாட்டலில் தம்பி ஷாநவாஸ் தொகுத்த தோட்டாக்கள் என்ற குஜராத் கலவரங்களுக்கு எதிரான கவிதைத் தொகுப்பை வெளியிட அவரும் வந்திருந்தார்.

பிறகு மமக சார்பில் 2009ல் ஈரோட்டில் நடைபெற்ற பேச்சாளர் பயிற்சி முகாமிற்கு அவரை அழைத்திருந்தோம். இந்நிலையில் அவர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக 2010 ஆம் ஆண்டு மார்ச் முதல் ஏற்றுக்கொண்ட செய்தி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. மதங்கள் தொடர்பான அவரது ஆராய்ச்சியின் விளைவாக ஏற்பட்ட தேடலின் விடையாக அது அமைந்தது. பின்னாளில் இதைப்பற்றி அவர் குறிப்பிடும் போதெல்லாம் “நான் விமர்சிக்கத்தான் குர்ஆனைப் புரட்டினேன். ஆனால் குர்ஆன் என்னை மாற்றிவிட்டது” என்றார். அவர் இஸ்லாத்தை ஏற்றபோது பலமுனைகளிலும் விமர்சனங்கள் எழுந்தது. முஸ்லிம் குழுக்களும் தலைவர்களும் அவரை அலைகழித்தனர் அதை அவர் கவனமாக புரிந்து கொண்டு ஏகத்துவ சிந்தனைகளில் உறுதியாக இருந்தார்.

அப்துல்லாஹ்வாக மாறியபிறகு அவர் புதிய உலகில் பயணித்தார். மீண்டும் பல நாடுகளில் வலம் வந்தார், சுறுசுறுப்பாக தன்னை ஓர் முஸ்லிம் பரப்புரையாளராக பிரகடனப்படுத்திக் கொண்டு இயங்கினார்.

குறிப்பாக பெரியார், இஸ்லாம் குறித்து பேசிய, மறைக்கப்பட்ட பதிவுகளையெல்லாம் வெளிக்கொணர்ந்தார். “பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா?” என்ற தலைப்பில் அவரது உரைகளைத் தொகுத்து புத்தகமாக்கி இருந்தார். அதை எளிமைப்படுத்த வேண்டும் என என்னிடம் கேட்டுக் கொண்டு, அதன் நகலை எனக்கு அனுப்பிவைத்தார். நானும், மக்கள் உரிமை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அத்தேஷ் அவர்களும் அதை எளிமைப்படுத்திக் கொடுத்தோம். அதை வாசித்தபோது தான் தெரிந்தது பெரியார் எந்த அளவுக்கு இஸ்லாம் குறித்து ஆய்வு செய்துள்ளார் என்று!

நபி(ஸல்) அவர்கள் சொல்லாத சந்தனக் கூடு போன்ற நிகழ்வுகளை ஏன் நடத்துகிறீர்கள்? என அக்காலத்திலேயே முஸ்லிம்களை நோக்கி பெரியார் இடித்துரைத்த செய்தியைப் படிக்கவே புல்லரித்துப் போனோம்!. டாக்டர் ஜாகிர் நாயக் போன்ற கே வீ எஸ் ஹபீப் முஹம்மது போன்ற சரியான வழிகாட்டிகள் பெரியாரோடு பழகி இருந்தால் பல திருப்புமுனைகள் தென்னிந்தியாவில் நடந்திருக்கக் கூடும் என மனம் துடித்தது. அந்த அறிய தகவல்களை பெரியார்தாசன் நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழ் உலகிற்கு மறு அறிமுகம் செய்து வைத்தவர்.

இதுகுறித்து அவரும் அவருடைய சகாக்களும் தயாரித்த ஆவணப் படத்தைப் பார்வையிட அழைத்திருந்தார். பல்வேறு தரப்புகளைச் சார்ந்த1000க்கும் மேற்பட்டோர் வருகை தந்திருந்தனர். அதில் தமிழர்களுக்கும், தலித்களுக்கும், திராவிடர்களுக்கும் சரியான மார்க்கம் இஸ்லாம் என்பதை பெரியாரின் வழி நின்று தயாரித்திருந்தார். தயாரிப்பு நிலையின் போது இப்படம் குறித்து அவரிடமும், இப்ராகிம் காசிமிடமும் நான் கூறிய ஆலோசனைகளை ஏற்றுகொண்டார்.

அந்த ஆவணப்பட நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. அந்த திரையிடல் நிகழ்ச்சிக்குப் பிறகு அவரை அங்கேயே பாராட்டினேன். அதுதான் எங்களின் கடைசி சந்திப்பு!

அவர் முஸ்லிமாக மாறினாலும் அரசியல் ரீதியாக தன்னை மதிமுகவில் இணைத்துக் கொண்டார். இது அவரின் அடுத்தகட்ட பரபரப்பாக அமைந்தது, வைகோ, அவரை மதிமுகவின் உயர்நிலைக்குழு உறுப்பினராக அறிவித்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் வைகோவிடம் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கூறுவதாகவும், வைகோ அவர்கள் அதை ஆவலோடு கேட்பதாகவும் என்னிடம் கூறினார்.

2011ஆம் ஆண்டு தோப்புத்துறையில் முஸ்லிம் மாணவர் முன்னணி என்ற உள்ளூர் அமைப்பு ஏற்பாடு செய்த சீரத்துன் நபி விழா நிகழ்ச்சிக்கு அவரை அழைத்துப்போய் இருந்தேன். முற்றிலும் மாறுபட்ட அவரின் உரையை அங்கு கேட்க நேர்ந்தது.

எங்கள் ஊரின் புவியியல் அமைப்பையும், சுற்றுச்சூழலையும் ரசித்தார். அதனால் கூடுதலாக ஒருநாள் தங்கினார்.

பஜ்ர் தொழுகைக்கு பிறகு எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் புஷ்பவனம் பெரிய குத்தகை கிராமங்களுக்கு அழைத்துப் போனோம். கடற்கரை மணல்மேட்டில் சூரிய உதயத்தை ரசித்துக்கொண்டே பேசிக் கொண்டிருந்தோம். இந்த இடம் யாழ்ப்பாணத்தைப் போல் இருப்பதாக எல்லோரையும் போல் அவரும் கூறினார். அவருடன் இப்ராஹிம் காசிமி, அதிரை அன்சாரி காக்கா ஆகியோரும் வந்திருந்தனர்.

உங்கள் ஊரின் அமைதி பிடித்திருக்கின்றது என்ற அவர், நான் ஒரு புத்தகம் எழுதவேண்டும். அதற்கு சில நாட்கள் இங்கு தங்க விரும்புகிறேன் என்றார். எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று கூறினேன்.

கடைசியாக தாய்க்கழகம் நடத்திய ஜூலை 6 பேரணி ஏற்பாடு குறித்து என்னிடம் அலைபேசி வாயிலாகக் கேட்டறிந்தார். அதுதான் எங்களுடைய கடைசி உரையாடலாகும்.

இப்போது அவரது உடலை மக்கள் கூட்டமாக பார்த்தவண்ணம் உள்ளனர். மீண்டும் அவர் பரபரப்பாக பேசப்படுகிறார். தனது உடலை இறப்பிற்குப் பிறகு மருத்துவப் பரிசோதனைக்கு கொடுத்துவிட வேண்டும் என உயில் எழுதி வைத்திருந்ததால் அவரது உடலை சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைப்போம் என அவரது மகன் கூறிவிட்டார்.

அவரது மகன் வளவன் ஒரு நாத்திகர். அவர் என் கல்லூரி கால நண்பர். தன் தந்தைக்கு ஏற்பட்ட நேர்வழி அவருக்கு இதுவரை கிடைக்கவில்லை. சமுதாய தலைவர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என விடுத்த வேண்டுகோள் ஏற்றுகொள்ளபடவில்லை என்பதால் ஜனாசா தொழுகை மட்டுமே நடத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. உடல்தானத்திற்கு அனுமதி உண்டு என ஏற்கெனவே ஃபத்வாக்கள் உள்ளது. நாளை அவரது உடல் சென்னை மருத்துவக் கல்லூரியில் ஒப்படைக்கப்பட உள்ளது.

நாளை காலை 7:30 மணியளவில் சென்னை அண்ணா சாலையில் உள்ள மக்காஹ் பள்ளிவாசலுக்கு அவரது உடல் கொண்டுவரபடுகிறது பிறகு இரங்கல் கூட்டம் நடைபெற உள்ளது அதில் வைகோ, பேரா. ஜவாஹிருல்லாஹ், திருமாவளவன், பாக்கர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் அனைத்து நிகழ்வுகளும் காலை 9 மணிக்குள் நிறைவுபெற்றுவிடும் என தெரிகிறது.

பேராசிரியர் அப்துல்லாஹ் (எ) பெரியார்தாசன் அவர்களின் இழப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பாகும். ஓர் அறிவாளியை இழந்திருக்கிறோம். ஒரு சிறந்த பரப்புரையாளரைப் பறிகொடுத்திருக்கிறோம். பெரியார்தாசனாக இருந்தபோது ராமகோபாலனுடன் அவர் நடத்திய தொலைக்காட்சி விவாதங்கள் இப்போதும் நினைவுகளை அழுத்துகின்றன. ‘இந்தியாவின் முகலாயர்கள் ஆற்றிய சாதனைகள்’ ‘குழந்தைகள் வளர்ப்பு’ போன்ற தலைப்புகளில் அவர் ஆற்றிய சி.டி.க்கள் அறிய பொக்கிஷங்கள் ஆகும். இனி அவரது பணிகளை அவரது குறுந்தகடுகள் மேற்கொள்ளும் என நம்புவோம்.

அவர் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை இறைவன் மன்னிப்பானாக ! அவருக்கு உயரிய சொர்க்கம் கிடைக்க அருள் புரிவானாக அவரை போல் மேலும் பலரை இறைவன் தருவானாக!

கனத்த இதயத்துடன்

எம் தமிமுன் அன்சாரி

சமுதாய தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி தோப்புதுறைக்கு திடீர் வருகை!



சமுதாய தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி அவர்கள் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் பதற்றமான பகுதியை பார்வையிட்டார், செல்லும் வழியில் தோப்புதுறைக்கு வருகை தந்து மமக பொதுச்செயலாளர் சகோ.அன்சாரி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தோப்புதுறையில் பெருநாள் கொண்டாட்ட காட்சிகள் -3

08.08.2013 வியாழன் -மர்கஸில் பெருநாள் தொழுகை