அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

பயங்கரவாதிகளுக்குப் பரிவுகாட்டும் கமல் - அதிரை ஜாஃபர்!



சகநடிகையின் மேலாடை கிழிக்கப்பட்ட பிறகும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்களின் வீரியம் கமல் போன்ற அறிவுஜீவிகளுக்கு உறைக்கவில்லை போலிருக்கிறது. அவரின் துறையிலுள்ள பல நடிகைகளேநாட்டையே உலுக்கிய டெல்லி மாணவியை வன்புணர்ந்த காமுகர்களுக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தி நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில், நேற்று கேரளாவில் தனது விஸ்வரூபம்
திரைப்படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்த நடிகர் கமலஹாசனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, வன்புணர்வுகளுக்கு மரண தண்டனை வழங்குவதில் உடன்பாடில்லை என்றும், அது சட்டரீதியான கொலை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.


சகநடிகையின் மேலாடை கிழிக்கப்பட்ட பிறகும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்களின் வீரியம் கமல் போன்ற அறிவுஜீவிகளுக்கு உறைக்கவில்லை போலிருக்கிறது. அவரின் துறையிலுள்ள பல நடிகைகளே, பெண்களின் மீதான பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான மரணதண்டனை விதிக்கவேண்டுமென கோரியிருப்பதை அவர் அறிந்திருக்கிறாரோ என்னமோ! மரண தண்டனை என்பது எல்லா குற்றங்களுக்கும் வழங்கப்படுவதல்ல என்பதும், அரிதினும் அரிதான பயங்கர குற்றங்களுக்கு குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும்போது சட்டப்படி வழங்கப்படும் அதிகபட்ச தண்டனையே என்பதையும் கமல் அறியாதவரல்ல. எனினும்,கொடுங்குற்றவாளிகளுக்கும் ஜீவகாருண்யம் கோரும் இவர் போன்ற கலைஜீவிகளை மக்கள் இனம்கண்டு புறந்தள்ள வேண்டும்.

மிகுந்த சர்ச்சைக்குரிய படமாக எதிர்பார்க்கப்படும் விஸ்வரூபம் படத்தை எப்படியேனும் விற்று கல்லாகட்ட வேண்டும் என்ற முனைப்பில் ஈடுபட்டிருக்கும் கமலுக்கு, பெண்கள் சமூகம் நேரிடும் அச்சுறுத்தல்கள் விசயத்தில் அறிவு மழுங்கிவிட்டதோ என்றும் எண்ண வேண்டியுள்ளது.டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவியை வண்புணர்ந்து சீரழித்த மிருகங்களுக்குப் பரிவுகாட்டி இவரெல்லாம் வசனம்பேச வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. பாவிகளின் கொடுஞ்செயலால் மனமும், உடலும் ரணமாகி வேதனையில் உழன்று கொண்டிருக்கும் அபலைக்கு ஆதரவாக பிரதமர் முதல் கடைக்கோடி குடிமகன்கள்வரை குரல் கொடுத்திருக்கும்போது, அவர்களின் உணர்வுக்கு எதிராக கமல் தத்துவம் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.

வன்முறையில் ஈடுபடுவதாகச் சொல்லி ஒருசாராரை குறிப்பாக இசுலாமியர்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து படங்கள் எடுத்துவரும் கமல், அதைவிடக் கொடுமையான பெண்கள் சமூகத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலான குற்றத்தைச் செய்திருப்பவர்களுக்கு பரிந்து பேசுவது கமலின் இரட்டைவேடத்தையே காட்டுகிறது. தீவிரவாதம் என்பதற்கு கமல் வைத்திருக்கும் அளவுகோல் ஆளுக்கேற்ப மாறுபடுவதிலிருந்து கமலின் துவேசமும் சமூக அக்கறையின்மையும் வெட்டவெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஒருகாலத்தில் நடிகர்களில் பகுத்தறிவு கருத்துகளை விமர்சனங்களுக்கு அஞ்சாமல் பொதுவில் பேசிய கமல் மீதிருந்த நல்லெண்ணங்கள் தற்போதைய அவருடைய வணிக ரீதியிலான நோக்கங்களால் சிதைந்துள்ளது. ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய கமலின் சீர்திருத்தம் வரவேற்கவும் பாராட்டவும் வேண்டிய விசயம். கமல் என்ற தனிமனிதரின் பெண்ணுரிமைக்கு எதிரான கருத்துரிமைக்கு மதிப்பளிக்கும் அதேசமயம், பெண் சமூகத்திற்குத் தீங்கிழைக்கும் கொடுங்குற்றவாளிகளுக்கு பரிந்துபேசும் பிரபல நடிகர் என்றவகையில் கமலின் கருத்து கடுமையாக கண்டிக்கத்தக்கது.

- அதிரை ஜாஃபர், ஜெத்தா-சவூதி அரேபியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக