அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

இது அமெரிக்காவுக்கு நல்லதல்ல!

கடந்த ஈராண்டுகளாக சிரியாவில் உள்நாட்டு யுத்தம் நடந்து வருகிறது. இது அதிகார மாற்றத்திற்கான யுத்தம் என்பதை விட, ஆட்சியில் இருக்கும் சியா சிந்தனை பிரிவை சேர்ந்த ஆசாத் தரப்புக்கும், தீவிர சன்னி பிரிவு போராளிகளுக்கும் இடையே நடக்கும் யுத்தம் என்பதுதான் உண்மை. இதை சகோதர எண்ணங்களோடு பேசி தீர்க்கும் பக்குவமும், அரசியல் முதிர்ச்சியும் இருதரப்புக்கும் இல்லை.

சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளின் மட்டமான சுயநலக் கொள்கைகளால் போரின் போக்கு நீடித்து வருகிறது.


பஹ்ரைனுக்கு ஒரு நியாயம், சிரியாவுக்கு ஒரு நியாயம் என அரபு நாடுகள் கேவலமான நடைமுறைகளை பின்பற்றி வருவதால் சிரியாவில் லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.


இஸ்ரேலை எதிர்க்க வக்கற்ற அரபு நாடுகள் சியா, சன்னி பிரச்சனைகளில் மட்டும் வீரம் காட்டுவது உலக மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.


சமீப காலமாக எகிப்து விஷயத்தில் உணர்வுள்ள முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் எடுத்த மோசமான முடிவுகள் முஸ்லிம் உலகத்தில் கடும் அதிருப்தியினை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் அவர்கள் திருந்துவதாக இல்லை.


இப்போது உச்ச கட்டமாக சிரியாவின் மீது போர் தொடுக்க போவதாக அமெரிக்கா எடுத்துள்ள முடிவு உலகின் பெரும்பான்மை மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதை மானமுள்ள முஸ்லிம் நாடுகள் எதிர்க்க வேண்டும்.


சிரியாவில் நடைபெறும் பிரச்சனைகளுக்கு முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு (OIC) மூலமாகவோ அல்லது ஐநா சபை மூலமாகவோ அரசியல் தீர்வு காண வேண்டுமே தவிர, இதில் அமெரிக்கா நாட்டாமை செய்யக்கூடாது.


இப்போரில் பங்கேற்க போவதில்லை என இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. காரணம் அங்குள்ள எதிர்க்கட்சிகளும், பொது மக்களும் அமெரிக்காவின் தேவையற்ற போரை விரும்பவில்லை.


ரஷ்யா, சீனா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகள் சிரியாவுக்கு ஆதரவாக நிலைபாடுகள் எடுத்துள்ளன.


அமெரிக்கா சதாமின் மீது வீண் பழி போட்டு அந்நாட்டுக்குள் நுழைந்து சதாமை தூக்கிலிட்டு ஈராக்கை நாசப்படுத்தியது. ரசாயன ஆயுதங்கள் ஈராக்கிடம் இருப்பதாக குற்றம் சுமத்திதான் அங்கே யுத்தம் தொடங்கியது. பிறகு அங்கு ரசாயன ஆயுதங்கள் இல்லை என்று அமெரிக்கா ஒத்துக்கொண்டது. ஆனாலும் அங்கு நடைபெற்ற அழிவுகளுக்கு பொறுப்பேற்கவில்லை. இன்று வரை அங்கே சியா, சன்னி மோதல்கள் தொடர்கின்றன. அதே நிலைதான் சிரியா விஷயத்திலும் நடைபெறுகிறது.


சிரியா அதிபர் ஆசாத்துக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுப்பதற்கு முக்கிய காரணம் இஸ்ரேல்தான்!


சிரியா லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கும், பாலஸ்தீனத்தில் ஹமாஸ் க்கும் ஆதரவு தெரிவித்து வருகிறது. அதற்கு வஞ்சம் தீர்ப்பதற்காகத்தான் இஸ்ரேலின் தூண்டுதலின் பேரில், சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தை காரணம் காட்டி சிரியா மீது போர் தொடுத்து அதிபர் ஆசாத்தை பழிவாங்க துடிக்கிறார்கள்.


இந்த உண்மைகளை தெரிந்தும் அரபு நாட்டு கோலை மன்னர்கள் அமெரிக்காவின் காலடியில் கிடப்பது வெட்கக்கேடாகும்.


துருக்கி போன்ற புத்திசாலிதனமான வெளியுறவு கொள்கைகளை கொண்ட முஸ்லிம் நாடுகள் இவ்விஷயத்தில் தடுமாறுவது வேதனை அளிக்கிறது.

சிரியா மீது அமெரிக்கா போர் தொடுக்குமேயானால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். காரணம் இதில் ஈரான், லெபனான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்கேற்கும் என்பதில் ஐயமில்லை.

வியட்நாம், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அமெரிக்கா தலையிட்டு தோல்வியடைந்தது போலவே சிரியாவிலும் நடக்கும்.

எனவே ரசாயன ஆயுதங்கள் என்ற நாடகத்தை காரணம் காட்டி சிரியாவுக்குள் அமெரிக்கா நுழையும்போது அதன் எதிர்விளைவுகள் அமெரிக்காவில் மக்கள் எழுச்சியை உருவாக்கும். உலகமெங்கும் மீண்டும் பதற்றம் பரவும்.

இதை ஒபாமா உணர வேண்டும். ஒபாமா ஒரு அமைதி விரும்பி. ஆனால் அமெரிக்காவின் உளவுத்துறையையும், அங்கு அதிகாரம் செலுத்தும் யூதர்களையும் மீறி அவரால் எதையும் செய்ய முடியாது. ஒபாமா இதில் ஒரு பலிகடா என்பது எத்தனை பேருக்கு தெரியும்?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக