அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

சென்னையில் தொடங்கியது புத்தகத் திருவிழா

தமிழகத்தின் அறிவுத் திருவிழா தொடங்கியிருக்கிறது. ஜனவரி மாதம் தைப்பொங்கல் மகிழ்ச்சியில் தமிழகமே திளைக்க; சென்னை மக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக புத்தகக் காட்சி அவர்களது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது.

Photo
பிரிட்டிஷ் இந்தியன் பப்ளிகேஷன் சார்பில் 35 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய நிகழ்வாக தொடங்கப்பட்ட இப்புத்தகத் திருவிழா இன்று 700 கடைகள், 5 லட்சம் தலைப்புகள், 1 கோடி புத்தகங்கள் என்று வளர்ந்திருக்கிறது.

சென்னை அண்ணா சாலையில், காயிதே மில்லத் மகளிர் கல்லூரியில் தான் 2004 வரை நடைபெற்று வந்தது. பொதுமக்களின் வரவேற்பு, கூடுதலாக கிடைத்த விளம்பரம், புத்தக வாசிப்பாளர்களின் எண்ணிக்கை உயர்வு, மட்டுமின்றி, இது ஒரு ‘ஷாப்பிங்’ திருவிழா போன்ற வெகுஜன வளர்ச்சியைப் பெற்றதன் விளைவாக பெரிய வளாகத்தை நோக்கி நகர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

பிறகு, பூந்தமல்லி சாலையில், பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே, செயின்ட் ஜார்ஜ ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைபெற்ற இப்புத்தகக் காட்சி கூடுதல் படைகள், ‘பார்க்கிங்’ வசதிகள் என மக்களை ஈர்த்தது.

இவ்வருடம் அப்பள்ளிக்கூட நிர்வாகத்தில் ஏற்பட்ட சலசலப்புகள் காரணமாக அண்ணா சாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு மாறியிருக்கிறது. இதற்கு மேயர் துரைசாமி பெரிய அளவில் உதவியதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஜனவரி 11ஆம் தேதி தொடங்கிய புத்தகக் காட்சி ஜனவரி 23 வரை நடைபெறுகிறது. முந்தைய ஆண்டை விட 50 ஆயரம் சதுர அடி கூடுதல் பரப்பளவில், விசாலமான பாதை அமைப்புகளுடன் நடைபெற்று வருகிறது.

நிறைய ஆங்கில புத்தகக் கடைகளும், இந்தி உள்ளிட்ட பிற மொழி கடைகள் மட்டுமின்றி, ஓரிரு வெளிநாட்டு நிறுவனங்களும் கடை விரித்திருக்கின்றன.

12 லட்சம் பேரை எதிர்பார்த்து, 15 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வருபவர்கள் எல்லோரும் புத்தகப் பிரியர்கள் இல்லை. பாதிக்கும் மேற்பட்டோர் குடும்பத்தோடு சுற்றிப் பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு இடமாகவும் இதை அனுபவிக்கிறார்கள்.

இரண்டு ரூபாயில் தொடங்கி 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் எல்லாம் புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. சி.டி. கடைகளும், சாப்ட்வேர் கடைகளும் உண்டு.

பல கடைகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அழகே ரசிக்கும்படியாக உள்ளது. விலைதான் அதிர்ச்சியளிக்கிறது.
சிறியவர்கள், பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள் என பலதரப்பையும் குறிவைத்து புத்தங்கஙகள் குவிக்கப்பட்டிருக்கிறது. அரசியல், அறிவியல், வரலாறு, சமூகம், மதம், சாதியம், விளையாட்டு, பொழுதுபோக்கு, கவிதை, நாவல், கதைகள், கட்டுரைகள் மட்டுமின்றி உலகப் புகழ்பெற்ற ஆங்கில & பாரசீக & கிரேக்க & அரேபிய & பிரெஞ்சு நூல்களின் மொழிபெயர்ப்புகளும் புருவத்தை உயர்த்தச் செய்கிறது.
சில புத்தகங்களின் வடிவமைப்பும், செய்நேர்த்தியும், தாள்களும், கலை நேர்த்தியுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

அரசின் ஒத்துழைப்புடன், தனியார் புத்தக நிறுவனங்களின் கூட்டமைப்பான தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (ஙிகிறிகிஷிமி) நடத்தும் இப்புத்தகக் காட்சி இந்தியாவிலேயே மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் பொதுமக்களோடு அரசியல், சினிமா, இலக்கியப் பிரமுகர்களும் வருகை தருகிறார்கள். விஐபி ‘பந்தா’ இல்லாமல் பார்த்து, பார்த்து புத்தகங்களைத் தேடுகிறார்கள்.

தினமும் மாலை வேளைகளில் அரசியல், சினிமா, இலக்கிய வட்டாரங்களைச் சேர்ந்தவர்களில் யாராவது ஒருவர் வெளியே அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அரங்கில் உரையாற்றுகிறார்கள். இவ்வருடம் வைகோ, சீமான், வாலி, பிரபஞ்சன், இயக்குனர்கள் சசிகுமார், சமுத்திரகனி போன்றவர்கள் பங்கேற்கிறார்கள். இது புத்தகக் காட்சிக்கு மெருகூட்டுகிறது. வாசகர்கள், நேயர்களாகவும் மாறி அனுபவிக்கும் இரட்டை மகிழ்ச்சியைத் தருகிறது.

உணவகங்கள், ரத்த வங்கி, ஏடிஎம், டாய்லெட் வசதிகள் என இதர அம்சங்கள் இருந்தாலும், புத்தகத் திருவிழாவின் நாட்களை மூன்று வாரங்கள் அல்லது 1 மாதம் என நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.

குறைந்த நாட்களில் 700 கடைகளுக்கு ஏறி இறங்கி, புத்தகங்களைத் தேடிப்பிடிப்பதும், கூட்ட நெரிசலும் சிரமங்களைத் தருவதால் இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சிந்திக்க வேண்டும்.
சென்னையின் மையப்பகுதியில் இவ்வருடம் நிகழ்ச்சி நடந்தாலும், இதை ஏன் மெரினா கடற்கரை அல்லது தீவுத்திடலில் நடத்தக்கூடாது என்ற கேள்வியும் எழுகிறது.

காரணம், அண்ணா சாலையின் சென்னையில் தொடங்கியது புத்தகத் திருவிழா தமிழகத்தின் அறிவுத் திருவிழா தொடங்கியிருக்கிறது. ஜனவரி மாதம் தைப்பொங்கல் மகிழ்ச்சியில் தமிழகமே திளைக்க; சென்னை மக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியாக புத்தகக் காட்சி அவர்களது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது.

காரணம், அண்ணா சாலையின் போக்குவரத்து நெரிசலைக் கடக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் திணற வேண்டியுள்ளது. எனவே பபாசி குழுவினர் இதைப் பரிசீலிக்க வேண்டும்.

நான் சென்னைப் புதுக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்ற 1997 முதல் தொடர்ந்து இப்புத்தக் கண்காட்சிக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றேன். இடையில் 2005 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் இருந்ததால் பங்கேற்க முடியவில்லை. முதன் முதலில் 1997ல் காயிதே மில்லத் கல்லூரியில் பங்கேற்ற சூழலில் இருந்து பெரும் மாற்றத்தை சமீப வருடங்களில் பார்க்க முடிகின்றது.

நேற்று புத்தகக் கண்காட்சிக்கு சென்றபோது வழக்கம் போல் உற்சாகமாக இருந்தது. பேரா. ஜவாஹிருல்லாஹ், அப்துல் சமது, ஹாருன் ரசீத், ஈரோடு பாரூக், தர்மபுரி சாதிக், மௌலா நாசர், தைமிய்யா என நெருக்கமானவர்களுடன் கடை கடையாக ஏறி இறங்கினோம்.
பழ.நெடுமாறன், டி.எஸ்.எஸ்.மணி என அரசியல் தோழமைகளுடனும் உரையாட முடிந்தது. தினமும் செல்ல வேண்டும் என ஆவல் பிறக்கின்றது.

தமிழகத்தில் உருப்படியாக நடைபெறும் ஓரிரு நல்ல விஷயங்களில் இது முதன்மையானதாக மாறிவருவது மகிழ்ச்சியளிக்கிறது.

வாருங்கள்! குடும்பத்தோடு வாருங்கள்! வாசிப்போம்! யோசிப்போம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக