அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

மலேசியா-ரி.ம 500க்கும் குறைவான விவேக கைத்தொலைப்பேசிகளுக்கே 200 ரிங்கிட் கழிவு

ரி.ம 500க்கும் குறைவான விவேக கைத்தொலைப்பேசிகளுக்கே 200 ரிங்கிட் கழிவு


 டிசம்பர் 28- 2013-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவேகக் கைத்தொலைப்பேசிக்கான 200 ரிங்கிட் கழிவானது சில நிபந்தனைகளுக்குட்பட்டது, என தற்போது தெரியவந்துள்ளது.

அவ்வகையில் 500 ரிங்கிட்டுக்கும் குறைவான விவேக கைத்தொலைப்பேசி வாங்குபவர்களுக்கே இந்த 200 ரிங்கிட் கழிவு வழங்கப்படும். நாட்டில் நிலவும் டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்து, நடுத்தர வருமானம் பெறும் மக்கள் மக்கள் சாதாரண தொலைப்பேசியிலிருந்து விவேக கைத்தொலைப்பேசிக்கு மாற ஊக்குவிப்பதற்காகவே இந்த 200 ரிங்கிட் கழிவு வழங்கப்படுகிறது.
மாறாக, அதிக விலையுள்ள கைத்தொலைப்பேசிகளை வாங்க எண்ணம் கொண்டுள்ளவர்களை முன்னிறுத்தி, இந்த 200 ரிங்கிட் கழிவு வழங்கப்படவில்லை என மலேசிய தகவல் மற்றும் பல்லூடக ஆணையத்தின் தலைவர் டத்தோ முகமது ஷாரில் முகமது தர்மிசி கூறினார்.
“பழைய கைத்தொலைப்பேசிகளைக் கொண்டிருப்பவர்கள் குறைந்தபட்சம் 3G கைத்தொலைப்பேசிக்காவது மாற வேண்டும்” என்பதே இந்த 200 ரிங்கிட் கழிவு வழங்கப்படுவதற்கான இலக்காகும்.
மேலும், இந்த விவேக கைத்தொலைப்பேசிக்கான 200 ரிங்கிட் கழிவானது, அதிக வருமானம் பெறுபவர்களுக்கு அல்ல. மாதந்தோறும் 3000 ரிங்கிட்டுக்கும் குறைவான சம்பளம் பெறுபவர்களுக்கே இந்த கழிவு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், 21- 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு சலுகை வழங்கப்படும்.
தாங்கள் மேற்கொண்ட ஆய்வின் படி, மொத்தம் 7 வெவ்வேறு உற்பத்தியாளர்களின் 20 வகையான விவேக கைத்தொலைப்பேசிகள் 500 ரிங்கிட்டுக்குள் விற்கப்படுகின்றன. இவற்றுள் சில உற்பத்தியாளர்கள் அனைத்துலக தரத்தைக் கொண்டிருக்கின்றனர் என்றார் அவர்.
“நாங்கள் ஆராய்ந்ததில், இன்று சந்தையில் முன்னணி வகிக்கும் சம்சுங் நிறுவனம் கூட தனது Samsung Galaxy Y ரக விவேக கைத்தொலைப்பேசியை 500 ரிங்கிட்டுக்கும் குறைவாக விற்பது தெரியவந்துள்ளது. 2013-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் விவேக கைத்தொலைப்பேசி கழிவுக்காக ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டின் வழி சுமார் 1.5 மில்லியன் இளைஞர்கள் பயனடைவார்கள் என நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக