அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

அன்வாருல் இஸ்லாம் கலாச்சார சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சந்திப்பு


16/12/2012  ஞாயிறு மாலை 4.00 மணியளவில் அன்வாருல்  இஸ்லாம் கலாச்சார சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் மற்றும்  உறுப்பினர்கள் கலந்து கொண்ட சந்திப்பு நிகழ்ச்சி சகோதரர் M.சேக் மைதீன் அவர்கள் தலைமையில் லெப்பை அப்பா பள்ளிவாசலில் நடைபெற்றது, கூட்டத்தின் முடிவில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாபெரும் பொது மன்னிப்பு - சவூதி மன்னர் அப்துல்லா அறிவிப்பு!


கடுமையான தண்டனைகளுக்குப் பெயர் பெற்ற நாடான சவூதி அரேபியாவில் சிறையில் வாடும் குற்றவாளிகளுக்கு மன்னர் பொதுமன்னிப்பு அளித்துள்ளார். பொது உரிமை மீறல் குற்றத்தின் கீழ் சிறையில் வாடுபவர்களுக்கும், நிதிக்குற்றங்களுக்காக சிறைப்பட்டு, திவாலாகிப் போனவர்களுக்கும் அவர்தம் குடும்ப நலனை கருத்தில் கொண்டு, அனைவருக்கும் பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதாக சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அறிவித்துள்ளதாக சவூதி செய்தி முகவம் தெரிவித்துள்ளது.

NEWYEAR அன்று நீங்க சிங்கபூர்ல இருக்கிங்களா இத கொஞ்சம் படிங்க


கண்ட இடங்களில் குப்பை போடுவோர் வரும் புத்­தாண்டு தினத்­தன்று கூடுதல் எச்­ச­ரிக்கை­யு­டன் இருக்­க­வேண்­டும் என்று தேசிய சுற்­றுச்­சூ­ழல் முகவை அறி­வு­றுத்தி உள்ளது.

மலேசியா-ரி.ம 500க்கும் குறைவான விவேக கைத்தொலைப்பேசிகளுக்கே 200 ரிங்கிட் கழிவு

ரி.ம 500க்கும் குறைவான விவேக கைத்தொலைப்பேசிகளுக்கே 200 ரிங்கிட் கழிவு


 டிசம்பர் 28- 2013-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவேகக் கைத்தொலைப்பேசிக்கான 200 ரிங்கிட் கழிவானது சில நிபந்தனைகளுக்குட்பட்டது, என தற்போது தெரியவந்துள்ளது.

கோடியக்கரை வரை அகல ரயில் பாதை அமைக்க வலியுறுத்தல்

 
திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி ரயில் பாதையை கோடியக்கரை வரை நீட்டித்து, அகலப் பாதையாக்கி பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலகெங்கும் வாழும் தோப்புத்துறை மக்கள்!

கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக உலகெங்கும் வாழும் தோப்புத்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களை இணையதள வாயிலாக ஒன்றினைப்பதில் இந்த இணையத்தளம் பெருமகிழ்ச்சியடைகிறது. கடந்த ஒரு மாத காலம் இந்த இணயதள வருகை பதிவை நாடுகளின் அடிப்படையில் உங்களின் பார்வைக்கு...

காணாமல்போன கால்வாய் (பக்கின்ஹாம்)

சென்னையில் நிறையப் பேருக்கு இதை டைடல் பார்க்குக்கு எதிரே ஓடும் சாக்கடை என்ற அளவில் மட்டுமே தெரியும். ஹிந்து முதலான நாளிதழ்களில் கொஞ்சம் பேசப் பட்டிருந்தாலும் நாம் சந்தித்த நிறைய பேருக்குத் தெரியாத விஷயம் "பக்கிங்ஹாம் கால்வாய்" தென்னிந்தியாவின் மிக நீளமான நன்னீர் கால்வாய்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு RM 500- முகிதின் யாசின்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு RM 500- முகிதின் யாசின் 
டிசம்பர் 27-மலேசியாவின் கிழற்குக்கடற்கரை மாநிலங்களான கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் ஆகிய மூன்று மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தால் இதுவரை 17,000 வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ நிவாரண மையங்களில் தங்கியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 500 ரிங்கிட் வழங்கப்படும் என துணைப்பிரதமர் டான் ஸ்ரீ முகிதின் யாசின் அறிவித்துள்ளார்.

நிலவில் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?

 
நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர் யார்? இந்தக் கேள்விக்கு யாராயிருந்தாலும் உடனே பதில் சொல்லிவிடுவீர்கள்.நீல்ஆம்ஸ்ட்ராங் என்று. நிலவில் முதன் முதலில் கால் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா? பல பேருக்கு தெரியாது அவர் எட்வின் சி ஆல்ட்ரின்.

வேதாரண்யத்தில் டெங்கு கொசு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி...

வேதாரணியம் தமிழ் பண்பாட்டு கலைஞர்கள் சங்கம் சார்பில் டெங்கு கொசு மற்றும் பிளாஸ்டிக்  ஒழிப்பு  மற்றும் விழிப்புணர்வு பேரணி வேதாரண்யத்தில் இன்று (25.12.2012) நடைபெற்றது. பேரணியை டாக்டர் Y .அக்பர் அலி துவக்கிவைத்தார்,

எரிசக்தி பிரச்னைக்கு எளிய தீர்வு!



மானியம் இல்லாத ஒரு கேஸ் சிலிண்டரின் விலை 900 ரூபாய்க்கு மேல் போய் நடுத்தரக் குடும்பங்களைத் திக்குமுக்காட வைத்துக்கொண்டிருக்க, எரிசக்தி பிரச்னைக்கு எளிய தீர்வு கண்டுபிடித்துச் சொல்லி இருக்கிறது திருச்சியைச் சேர்ந்த ஜமால் முகமது கல்லூரி.

பயங்கரவாதிகளுக்குப் பரிவுகாட்டும் கமல் - அதிரை ஜாஃபர்!



சகநடிகையின் மேலாடை கிழிக்கப்பட்ட பிறகும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்களின் வீரியம் கமல் போன்ற அறிவுஜீவிகளுக்கு உறைக்கவில்லை போலிருக்கிறது. அவரின் துறையிலுள்ள பல நடிகைகளேநாட்டையே உலுக்கிய டெல்லி மாணவியை வன்புணர்ந்த காமுகர்களுக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தி நாடெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வரும் நிலையில், நேற்று கேரளாவில் தனது விஸ்வரூபம்
திரைப்படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்த நடிகர் கமலஹாசனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, வன்புணர்வுகளுக்கு மரண தண்டனை வழங்குவதில் உடன்பாடில்லை என்றும், அது சட்டரீதியான கொலை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

சுனாமியின் சுவடுகளை அழிக்கும் இல்லம்

KINDER HUTடிசம்பர் 26, 2004ம் ஆண்டில் உல­­­கத்தையே உலுக்­­­கிய சுனாமி இந்தியா, மலேசியா, தாய்­­­லந்து, போன்ற பல நாட்டு மக்களை அதிர்ச்­­­சி­­­யி­­­லும் பீதி­­­யி­­­லும் மூழ்­­­க­­­டித்­­­தது. பலரை­­­யும் ஆத­­­ர­­­வற்­­­ற­­­வர்­­­க­­­ளாக்­­­கிய இச்­­­சம்ப­­­வம், முழு உல­­­கத்­­­தின் கவ­­­னத்தை­­­யும் ஈர்த்­­­த­­­து­­­டன் பலரது நினை­­­வி­­­லும் பசு­­­ம­­­ரத்­­­தாணியைப் போல் பதிந்­­­து­­­விட்­­­டது.

கற்பழிப்புக்கு இஸ்லாமிய தண்டனை : கே.எம். காதிர் மொஹிதீன்

திருச்சி: திருச்சி லால்பேட்டையில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரியர் கே.எம். காதிர் மொஹிதீன் அங்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

டெல்லியில் தாலிபான்கள் போராட்டம்!

சமீபத்தில் டெல்லியின் துணை மருத்துவ கல்லூரி மாணவியை காமுகர்கள் ஓடும் பேரூந்துக்குள் வைத்து வண்புணர்ந்த நிகழ்வு செய்தி ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து

ஆட்டோ ரிக்ஷாக்களில் அதிக குழந்தைகளை ஏற்றிச்செல்லும் டிரைவர்களின் உரிமம் ரத்து

ஆட்டோ ரிக்ஷாக்களில் அதிக குழந்தைகளை ஏற்றிச்செல்லும் டிரைவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் முனுசாமி கூறினார்.நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:–

வேதை வட்டாரத்தில் மமக நடத்திய மது-மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தம்!


நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகலான தோப்புத்துறை, தேத்தாகுடி, செம்போடை, கருப்பன்புலம், ஆயக்கரன்புலம், கரியபட்டினம், தென்னம்புலம் ஆகிய இடங்களில் மனிதநேய மக்கள் கட்சியினர் மது-மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை செய்தனர்,