அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

பறவையியல் அறிவியலாளர் சலீம் அலி!

பத்து வயது சிறுவனாக இருந்தபோது, சிறிய துப்பாக்கியால் தன் தோட்டத்தின் மரங்களிலிருந்த குருவியின் கூட்டத்தை நோக்கி சுட்டான். ஒரே ஒரு குருவி மட்டும் கீழே விழுந்தது. அதை உற்று நோக்கினான். அந்தக் குருவியின் தொண்டையில் மஞ்சள் நிறத் திட்டு இருந்தது. அது அச்சிறுவனது சிந்தனையைத் தூண்டியது. அவன், பறவைகளைப் பற்றிய ஓரளவு அறிவு பெற்ற தனது மாமாவிடம் விளக்கம் கேட்டான்

காசாவுக்காக குரல் கொடுக்கும் ரப்பில் பக்கெட் சாலஞ்ச்

இணைய நிகழ்வுகள் வைரலாக பரவும் போது அவை மேலும் பரவும் என்பதோடு பலவிதங்களில் வடிவமெடுப்பதும் உண்டு. இப்படி கிளையெடுக்கும் வடிவங்கள் மூலத்தின் உதவியோடு தாங்கள் நம்பும் நோக்கத்தின் மீது கவனத்தை ஏற்படுத்த முயலும். இப்படி தான் சமீபத்தில் இணையத்தில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கும் ஐஸ் பக்கெட் சாலஞ்ச் நிகழ்வு, இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் பாதிக்கப்பட்டிருக்கும் காசா பகுதி மக்களுக்காக குரல் கொடுக்கும் நிகழ்வாக கிளைவிட்டுள்ளது.

சிக்கல் - 65 ஜிலீரிட வைக்கும் சிக்கன் ரிப்போர்ட்!

ம.பிரியதர்ஷினி
சிக்கன் பிரியாணி, சிக்கன்-65, சிக்கன் குழம்பு என வாரா வாரம் சிக்கன் சுவைக்கும் குடும்பமா நீங்கள்?! உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சித் தகவல்கள்!

370 - காஷ்மீரை இணைக்கும் கண்ணி! ஹாஜா கனி

மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ள மதவாத பா.ஜ.க.வின் அபாயகரமான செயல்திட்டங்களில் ஒன்று, இந்திய அரசியல் சாசனத்தின் 370ஆவது பிரிவை நீக்குவதாகும்.
காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்புத் தகுதி வழங்கும் 370ஆவது பிரிவை நீக்க வேண்டும் என்ற பா.ஜ.க.வின் கோரிக்கை, காஷ்மீரின் வரலாற்றை அறிந்தவர்களால் அபத்தமாகக் கருதப்படும்.

MSF – 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா! தயாராகிறது தோப்புத்துறை!!

 
தோப்புத்துறையின் முகத்தை மாற்றியமைத்த சேவைஇயக்கமான முஸ்லிம் மாணவர் முன்னணி (MSF) அடுத்தாண்டு வெள்ளிவிழாவை கொண்டாட இருக்கிறது.                    

கல்வி, விழிப்புணர்வு, பெண்கள் முன்னேற்றம், சுற்றுசூழல்பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட பரந்து விரிந்த கொள்கைகளோடு கடந்த
24 ஆண்டு காலமாக தொடர்ந்து இயங்கி வரும் MSF அமைப்பு
வெள்ளிவிழாவை நோக்கி நடை பயிலத் தொடங்கியிருக்கிறது.

MSFன் வெள்ளிவிழா ஆலோசனை கூட்டம்

MSFன் வெள்ளிவிழா ஆலோசனை கூட்டம் வெள்ளிகிழமை(01.08.14)
மாலை 4.30  மணியளவில் லெப்பைஅப்பா பள்ளியில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள், அமீரகத்திலிருந்து தாயகம் வந்திருக்கும் முன்னாள் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளும்படி கேட்டுகொள்கிறோம்.

-நிர்வாகம்- 

இதயங்கனிந்த ஈகைப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்...


தோப்புத்துறைநியூஸ்.காம் வாசகர்கள் அனைவருக்கும் உள்ளங்கள் எல்லோர்க்கும்
இதயங்கனிந்த ஈகைப்பெருநாள் நல்வாழ்த்துக்கள்....