அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

கோடியக்கரை வரை அகல ரயில் பாதை அமைக்க வலியுறுத்தல்

 
திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி ரயில் பாதையை கோடியக்கரை வரை நீட்டித்து, அகலப் பாதையாக்கி பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை இயக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து நாகை மாவட்டம்,வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சுசீலாதேவி சரவணன் தென்னக ரயில்வே மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள மனு:
திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி வரையுள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதை,முன்பு கோடியக்கரை வரை இருந்து,பல ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டது.
இந்த பாதையில் ரயில்கள் இயக்கமும் நிறுத்தப்பட்டது.
தற்போது,அகஸ்தியம்பள்ளி வரை அகலப் பாதையாக மாற்றப்பட உள்ளதாகத் தெரிகிறது.
கோடியக்கரை சுற்றுலாத் தலமாக இருப்பதாலும்,ஆன்மிகம்,வரலாறு உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளதாலும்,இங்கு இந்திய கடற்படை,விமானப்படை கண்காணிப்பு தளங்கள் உள்ளதை கருத்தில் கொண்டு,ரயில் பாதையை கோடியக்கரை வரை நீட்டிக்க வேண்டும்.
மேலும், தோப்புத்துறை- வேதாரண்யம் ரயில் நிறுத்தத்துக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ஆறுகாட்டுத்துறை கிராமத்தில் சுமார் 1500 மீனவக் குடும்பங்கள் உள்ளன. அவர்களது வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு, அந்த பகுதியில் தனியாக ரயில்வே நிறுத்தமும்,ரயில் கேட்டும் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். அத்துடன்,இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒன்றியக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலும் அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக