அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

அமீரக விசா வைத்திருப்போர் ஜூன்-1 முதல் அமீரகம் திரும்பலாம்; நுழைவு அனுமதி பெறுவது எப்படி?

அமீரக விசா வைத்திருப்போர் ஜூன்-1 முதல் அமீரகம் திரும்பலாம்; நுழைவு அனுமதி பெறுவது எப்படி?

கொரோனா வைரஸ் காரணமாக விமான சேவை முடக்கப்பட்டதால் செல்லுபடியாகும் அமீரக விசா வைத்திருந்தும் அமீரகத்திற்குள் வர முடியாமல் சொந்த நாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். அத்தகையவர்கள் வரும் ஜூன்-1 முதல் மீண்டும் அமீரகம் திரும்ப, அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான கூட்டாட்சி ஆணையம் (ICA) ஏற்பாடு செய்துள்ளது.

செல்லுபடியாகும் அல்லது தற்போது காலாவதியான அமீரக விசா வைத்திருப்பவர்கள் மீண்டும் அமீரகம் வருவதற்கு இணையவழியாக நுழைவு அனுமதி பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அமீரகத்தில் குடும்பத்தினர் இருப்பவர்கள் மட்டும் நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது நாட்டிற்கு வெளியே உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? 

இந்த ( https://beta.smartservices.ica.gov.ae/echannels/web/client/guest/index.html#/issueResidentEntryPermission/request/708/step1?administrativeRegionId=1&withException=false ) இணைப்பில் உள்ள விண்ணப்பத்தில் உங்கள் விவரங்களை உள்ளீடு செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.

என்ன ஆவணங்கள் தேவை?

* உங்களின் வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
    
* அமீரக ரெஸிடண்ட் விசா நகல்
    
* பாஸ்போர்ட் நகல்
 
* எதற்காக நீங்கள் அமீரகத்தில் இருந்து வெளிநாடு சென்றீர்கள் என்பதற்கான அத்தாட்சி (உங்கள் பணி நிறுவந்திடமிருந்து பெற்ற கடிதம் அல்லது விமான டிக்கெட்)

* அமீரகம் வருவதற்கான விமான டிக்கெட் (கட்டாயமல்ல)

கட்டணம்: இல்லை

உங்கள் சுய விவரம் மற்றும் ஆவணங்களுடன் சமர்ப்பித்த விண்ணப்பத்தை உறுதிசெய்யும் பொருட்டு உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்படும். உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும் வரை காத்திருக்கவும்.

உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான உறுதி மின்னஞ்சல் வந்தவுடன், நீங்கள் அமீரகம் வருவதற்கான விமான பயனச் சீட்டை பதிவு செய்யலாம்.

அனுமதி பெறுவதை எப்படி டிரக் செய்வது??? 

https://beta.smartservices.ica.gov.ae/echannels/web/client/guest/index.html#/applicationTracking

ENTRY PERMISSION Register Link >> 

https://beta.smartservices.ica.gov.ae/echannels/web/client/guest/index.html#/issueResidentEntryPermission/request/708/step1?administrativeRegionId=1&withException=false

Application Tracking Link >> 

https://beta.smartservices.ica.gov.ae/echannels/web/client/guest/index.html#/applicationTracking