அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

சைபர் குற்றம் புரிவோர் மீது குண்டர் சட்டம்-முதல்வர் ஜெ. அறிவிப்பு!


சைபர் குற்றங்களைப் புரிவோர் மீது குணடர் சட்டம் பாயும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள்-காவல் துறை அதிகாரிகள் மாநாடு மூன்று நாள்கள் நடைபெற்றது. இதில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா இதனை தெரிவித்தார்.

மேலும், "குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். குற்றங்களைச் செய்வதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள், பொது அமைதியைக் குலைக்கும் வகையில் ஏதேனும் ஒரு குற்றச் செயலை முதல் முறையாகச் செய்தாலே, அவர்கள் குண்டர் சட்டத்ததின் கீழ் கைது செய்யப்படுவர்"  என்று கூறினார்,

"குண்டர் சட்டங்களுக்கான ஆவணங்களை தயாரிப்பதற்கென வழங்கப்படும் தொகையும் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக அதிகரிக்கப்படும்" என்றும் முதல்வர் தெரிவித்தார்.

சைபர் குற்றங்களைப் புரிவோர் மீது குணடர் சட்டம் பாயும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக