அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

அக்டோபர் 5- ம் தேதி சென்னை எழும்பூரில் முஸ்லிம் மாணவர் பேரவை யின் மாநில மாநாடு : பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்


 
திருச்சிக்கு வருகை தந்த பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பின்னர் நடைபெற்ற முஸ்லிம் மாணவர் பேரவையின் மாநில அமைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செய்தியாளர்க ளுக்கு தெரிவித்தார்
. அப்போது அவர் கூறிய தாவது-

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாணவர் அமைப்பான முஸ்லிம் மாணவர் பேரவை தேசிய அளவில் அங்கீகரிக்கப் பட்ட நான்கு அமைப்புகளில் ஒன்றாகும். மற்ற மூன்றும் முஸ்லிம் யூத் லீக், சுதந்திர தொழிலாளர் யூனியன், முஸ்லிம் மகளிர் அணி ஆகியவை களாகும். எம்.எஸ்.எஃப். மாநில மாநாடு

முஸ்லிம் மாணவர் பேரவை யின் மாநில மாநாடு ஏற்கனவே நெல்லை மாவட்டம் குற்றா லத்தில் நடைபெற்றுள்ளது. தற்போது எதிர்வரும் அக்டோபர் 5- ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

பல்லாயிரக்கணக்கான சீருடையணிந்த மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில், கல்வி சம்பந்தமான பிரச்சினைகள் குறித்தும், கல்விக்கடன் துரிதமாக கிடைக்கவும் -அதற்கான வட்டியை ரத்து செய்யவும் மத்திய - மாநில அரசுகளை கேட்டுக் கொண்டும், சிறு பான்மை மாணவர்களுக்கு மாவட்டத் தலைநகரங்களில் விடுதிகள் அமைக்க கோரியும்,

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் கிளையை தமிழ் நாட்டில் அமைக்க கோரியும், சிறுபான்மையினருக்கென மத்திய அரசு அமைக்கும் 5 பல்கலைக்கழகங்களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வலியுறுத்தியும், காயிதெ மில்லத் பெயரில் ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்கவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மாணவச் சமுதாயம் சாதி, மத, கல்லூரி அடிப்படையிலும் மோதிக் கொள்ளாமலும், ஒழுக்க மாண்புகளுக்கு உட் பட்டு தலைசிறந்த எதிர்கால பிரஜைகளாக உருவாக்கப்படும் முயற்சியாக செயல் திட்டங் கள்அறிவிக்கப்பட உள்ளன. வன்முறை, தீவிரவாதம், போதை மற்றும் குற்றப் பழக்க வழக்கங்கள் பக்கம் தலை காட்டாமல் மாணவச் சமுதாயம் தற்காத்து கொள்ளும் பயிற்சி கள் அளிக்கப்பட உள்ளன.

நாடாளுமன்ற தேர்தல்

மதச்சார்பற்ற, சமதர்ம, சமூக நீதிக்கு பாடுபடும் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து ஈடுபடும். இந்த சக்திகளை ஒருங்கிணைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க பாடுபடும்.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தி.மு.க. தலைமை யிலான அணியில் தொடர்ந்து , இடம் பெற்று தேர்தலை சந்திக் கும். இந்தக் கூட்டணியில் ஜனநாயக, சமயசார்பற்ற சம தர்ம, சமூக நீதியை நிலை நாட்டும் சக்திகள் அனைத்தும் இடம் பெறும்.

இலங்கைப் பிரச்சினை

காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தப்படக் கூடாது. அப்படி நடந்தால் அதில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் அந்த மாநாட்டிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேதான் தலைமை வகிப்பார். அப்படி தலைமை வகிக்கும் போது ராஜபக்சே அரசு இறுதிக் கட்டப் போரில் இலங்கை தமிழர்களுக்கு இழைத்த இன்னல்களுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே, கனடா சொல்வ தைப்போல் அந்த மாநாட்டை காமன்வெல்த் நாடுகள் புறக்கணிக்க வேண்டும்.

இதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மத்திய அரசிடம் வலியுறுத்தும். மத்திய அரசு அதற்கு செவிமடுக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறு வீர்களா? என கேட்பது அர்த்த மற்றது.

இலங்கைப் பிரச்சினையில் அனைத்தையும் நன்கறிந்த தி.மு.க. தலைவர் கலைஞர் கருத்தை ஏற்று மத்திய அரசு செயல்பட வேண்டும்.

காதல் திருமணங்கள் ஊக்குவிக்கப்படக்கூடாது. இதனால் சமூகப் பிரச்சினைகள் உருவாகின்றன. இருபாலர் கல்வி, காதல் திருமணங்க ளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள் ளது. ரயில், பேருந்து, காவல் நிலையங்கள் உள்ளிட் டவைகளிலெல்லாம் தனித்தனி யென இருப்பது போன்று கல்வி நிறுவனங்கள் தனியாக இருப்பதில் என்ன தவறு?

காவல் துறை மட்டுமே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தி விட முடியாது. நாட்டு மக்களும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்போது தான் சட்டம் ஒழுங்கை காப் பாற்ற முடியும்.

இவ்வாறு தலைவர் பேராசிரியர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக