அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

வேதாரணியத்தில் விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

 
டெல்லி  20/02/2013
உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்‌ ‌வி‌தி‌த்த கெடுவை தொட‌ர்‌ந்து காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் ம‌த்த‌ிய அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆ‌‌கிய மா‌நில‌ங்க‌ள் பய‌ன் பெறு‌‌‌ம்.

இன்று உச்ச நீதி மன்றம் அறிவித்த தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வந்ததை அடுத்து மாநிலம் முழுவதும் காவேரி நதியால் பயன் பெரும் விவசாயிகள் பெரும்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

இதே போல் வேதாரண்யத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் , விவசாய சங்கங்களும்  பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை பட்டாசு வெடித்து கொண்டாடினர் .


காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, பிப்ரவரி 20ம் தேதிக்குள் (இ‌ன்று) அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது.

எ‌ன்.‌பி.‌‌சி‌ங் தலைமை‌யி‌ல் கா‌வி‌ரி நடுவ‌ர் ம‌ன்ற‌ம் ‌இறு‌தி ‌தீ‌ர்‌ப்பு அ‌ளி‌த்தது. அ‌தி‌ல், கா‌வி‌ரி ‌நீ‌ரி‌ல் த‌மிழக‌த்த‌ி‌ற்கு 419 டிஎ‌ம்‌சி த‌‌ண்‌‌‌ணீரு‌ம், க‌ர்நாடகாவு‌க்கு 270 டிஎம‌்‌சியு‌ம், கேரளாவு‌க்கு 30 டிஎ‌ம்‌சியு‌ம், புது‌ச்சே‌ரி‌க்கு 7 டிஎ‌ம்‌சி த‌ண்‌ணீ‌ரு‌ம் வழ‌ங்க‌ப்பட வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தது.

கட‌ந்த 2007ஆ‌ம் ஆ‌ண்டு அ‌ளி‌த்த அ‌ந்த ‌தீ‌ர்‌ப்பை ம‌த்த‌ி‌ய அரசு இதுவரை அர‌சிதழ‌‌லி‌ல் வெ‌ளி‌யிட‌வி‌ல்லை. அர‌சிதழ‌லி‌ல் வெ‌ளி‌‌யிட‌க் கோ‌ரி த‌மிழக அரசு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு தொட‌ர்‌ந்தது. இதையடு‌த்து, கா‌வி‌ரி நடுவ‌ர் ம‌ன்ற இறு‌தி‌த் ‌தீ‌ர்‌ப்பை அர‌சிதழ‌‌லி‌ல் ‌பி‌ப்ரவ‌ரி 20ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் (இ‌ன்று) வெ‌ளி‌யிட உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ம‌த்‌திய அரசு‌க்கு ‌கெடு ‌வி‌தி‌த்‌திரு‌ந்தது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளி‌யி‌ட்டத‌ன் மூல‌ம், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான முக்கிய முடிவுகளை மேலாண்மை வாரியமே எடுக்கும் என்பதால், தமிழகத்தைப் பொறுத்த வரை, காவிரி நதிநீரைப் பெறுவதற்காக இனி நீதிமன்றங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது.

நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியாவதன் மூலம் காவிரி நதிநீர்ப் பங்கீடு, இனி காவிரி மேலாண்மை வாரியத்தின் மூலமே மேற்கொள்ளப்படும்.  இறுதித் தீர்ப்பின்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இந்த அமைப்பே நீரை பங்கிட்டு வழங்கும்.

இடைக்காலத் தீர்ப்பின்படி, 11 லட்சம் ஹெக்டேர் விளைநிலத்தின் பாசனத்திற்காக காவிரி தண்ணீரை பயன்படுத்தி வந்த கர்நாடகாவுக்கு, இறுதித் தீர்ப்பின்படி 19 லட்சம் ஹெக்டேருக்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான முக்கிய முடிவுகளை மேலாண்மை வாரியமே எடுக்கும் என்பதால், தமிழகத்தைப் பொறுத்த வரை, காவிரி நதிநீரைப் பெறுவதற்காக இனி நீதிமன்றங்களை நாட வேண்டிய அவசியம் இருக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக