அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

டெல்லியில் தாலிபான்கள் போராட்டம்!

சமீபத்தில் டெல்லியின் துணை மருத்துவ கல்லூரி மாணவியை காமுகர்கள் ஓடும் பேரூந்துக்குள் வைத்து வண்புணர்ந்த நிகழ்வு செய்தி ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து
,நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத்தொடரிலும் பிரதிபலித்து நாடெங்கும் அதிர்ச்சி அலையலைகள் உண்டாக்கியது. தலைநகர் டெல்லியில் நடந்துள்ள இந்த மிருகத்தனமான செயலால் பெண்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் கொதிந்தெழுந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இணைய தளங்களில் சமூக வலைத்தலங்களில் காமுகர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்துள்ளனர்.

நேற்றும் அதற்கு முன்தினமும் டெல்லியில் குவிந்த மாணாக்கர்களைக் கட்டுப்படுத்த முடியாமல், தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டுகளைவீசி விரட்டியடிக்க வேண்டியளவுக்கு உணர்வுப்பூர்மாக இந்தப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகிறது.காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்களிடம், காமுகர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அது விரைந்து எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.மக்களவையில் இப்பிரச்சினை குறித்து பேசிய சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயாபச்சன் குமுறி அழுதேவிட்டார். பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ், பல்வேறு கட்சியைச் சார்ந்தவர்களும் காமுகர்களுக்கு மரணதண்டனை விதிக்கும்படி ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

டெல்லியைப்போல் தமிழகத்திலும் சமீப நாட்களாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் மூன்றேநாளில் மட்டும் இளம்பெண்களுக்கு எதிரான கொடுங்குற்றங்கள் ஐந்து நடந்துள்ளன.வடமாநிலங்களிலும் அவ்வப்போது சாதிகளின் பெயரால் வன்கொடுமைகள் நடந்து வருவது ஒருபுறமிருக்க சினிமா நடிகையின் மேலாடை கிழிக்கப்பட்ட செய்தியும் வெளியானது! அதேபோல் தமிழகத்திலும் முன்னணி நடிகை ஒருவருக்கு எதிராக, ரசிகர்களின் அத்துமீறலைத் தொடர்ந்து,நடிகை ரோகினி தலைமையில் சென்னை மெரினாவில் பதாகைகளுடன் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுத்து நிறுத்தும்படி நள்ளிரவில் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்!


உலகலவில் நடக்கும் குற்றங்களில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.2008 ஆம் ஆண்டு புள்ளிவிபரத்தின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் வளர்ச்சி விகிதம்,2010 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைவிட அதிகம் என்று சொல்லப்பட்டது.பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகளை தடுக்கும் நோக்கில் மத்திய அரசு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது.இவையன்றி பணியில்,பொதுவில் பெண்களுக்கு எதிரான சமூக குற்றங்களைத் தடுக்கவும் பல்வேறு சட்டங்கள் இருந்து வருகின்றன. எனினும், குற்றங்கள் குறைந்த பாடில்லை.


பிற குற்றச்செயல்களைவிடவும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.பாலின உணர்வுகளைத் தூண்டும் வகையில் அவர்களின் ஆடைக்கலாச்சாரம் மாறியதும் ஒருவகையில் காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.எனினும்,ஆடைக்

குறைப்பும், கீழாடை தெரிய பாவடை அணிவதுமே பெண்ணுரிமை என்று சில பெண்ணுரிமைவாதிகளால் சொல்லப்பட்டது. பள்ளி, கல்லூரிகளில் ஆடைஒழுக்கம் குறித்த கட்டுப்பாடுகளும், நெறிமுறைகளும் இந்த பெண்ணுரிமைவாதிகளால் விமர்சிக்கப்பட்டதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இது ஒருபக்கமிருக்க,மதுவுக்கு எதிராக தமிழகத்தில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வருகின்றன.தமிழகத்தில் மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக தலைவர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.பாமக - மதுக்கடைக்கு பூட்டுப்போடும் போராட்டமும்,மமக சார்பில் விழிப்புணர்வு தொடர் பரப்புரைகளும் நடந்து வருகின்றன.


டெல்லி மாணவி மற்றும் நெல்லையில் நடந்த பெண்களுக்கு எதிரான பலாத்காரங்களுக்கு,அதைச் செய்தவர்கள் மது அருதி போதையிலிருந்ததாலேயே அவ்வாறு செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளதிலிருந்து இத்தகைய குற்றங்களுக்கெதிராக போராடுபவர்கள் மதுவுக்கு எதிராகவும் போராடவேண்டும். தொடர்புடைய குற்றச்செயல்களில் ஒன்றை மட்டும் எதிர்ப்பது அறிவுடைமையல்ல. இவற்றை எதிர்ப்பதற்கும் சட்டப்படியாக தடுக்கவும் இதுவே உகந்த தருனம்.


மதுவுக்கு எதிரான போராட்டங்கள்,வண்புணர்வுக்கு மரண தண்டனை கோரும் போராட்டம் மற்றும்பிற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை கோரும் போராட்டங்கள் உணர்த்தும் இன்னொரு தகவல் இந்தியாவிலும் தாலிபான்கள் உள்ளனர் என்பதே!ஆம். கடந்த வருடங்களில் இத்தகைய தண்டனையை நடைமுறைப்படுத்தியவர்களை காட்டுமிராண்டிகள் என்று தூற்றியவர்கள்தான் இன்று அதே தண்டனையை இந்தியாவில் வழங்க வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்தவர்களும் ஒருகாலத்தில் மாணாக்கர்களே என்பதும், தற்போது அத்தகைய தண்டனைக்காக டெல்லியில் வீதியிலிறங்கி போராடிக்கொண்டிருப்பவர்களில் பெரும்பாலோர் மாணாக்கர்களே என்பதிலிருந்து இந்தியா,சவூதி மற்றும் தாலிபான்களின் சட்டங்களை விரும்பும் நாடாக மாறிக்கொண்டிருக்கிறது என்றுதானே அர்த்தம்!



- அதிரைவாலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக