அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு RM 500- முகிதின் யாசின்


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு RM 500- முகிதின் யாசின் 
டிசம்பர் 27-மலேசியாவின் கிழற்குக்கடற்கரை மாநிலங்களான கிளந்தான், திரங்கானு மற்றும் பகாங் ஆகிய மூன்று மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தால் இதுவரை 17,000 வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அதிகாரப்பூர்வ நிவாரண மையங்களில் தங்கியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 500 ரிங்கிட் வழங்கப்படும் என துணைப்பிரதமர் டான் ஸ்ரீ முகிதின் யாசின் அறிவித்துள்ளார்.

“இதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ளுமாறு MKN எனப்படும் தேசிய பாதுகாப்பு மன்றத்தை கேட்டுக்கொள்கிறேன்” என வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, இங்கு குவால் திங்கி தேசியப் பள்ளியில் தஞ்சம் அடைந்துள்ள மக்களைச் சென்று சந்தித்த போது துணைப் பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக