அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

சமூக ஆர்வம் கொண்டவர்களுக்காக... சோஷியல் வொர்க் படிப்பு

''இன்று சுற்றுச்சூழல், மனித உரிமைகள், குழந்தைத் தொழிலாளர் பிரச்னைகள், பெண் சிசுக் கொலைகள் போன்ற சமூகப் பிரச்னைகள் குறித்த கவனங்கள் அதிகரித்திருக்கின்றன. இது குறித்த சமூகப் பிரச்னைகள் மற்றும் களப் பணிகள் குறித்து சொல்லித்தரும் படிப்பே மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க்.


தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இப்படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல சம்பளம் உண்டு. பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் இந்தப் பாடப் பிரிவு உண்டு என்றாலும், இதைத் தேர்ந்தெடுக்கிறவர்கள் குறைவு. எனவே, போட்டிகளும் குறைவு.

இப்படிப் பல துறைகளிலும் எண்ணற்ற பாடப் பிரிவுகள் இருந்தாலும், அவையெல்லாம் முறையாக அங்கீகரிக்கப்பட்டவைதானா, கல்வி நிறுவனங்கள் உரிய அங்கீகாரம் பெற்றவையா என்பதைக் கவனத்தில் கொண்டே இறுதி முடிவெடுக்க வேண்டும்!'' என்கிறார் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் வொர்க்கின் முதல்வர் ஃபாத்திமா வசந்த்.

''நீங்கள் எந்தப் படிப்பு படித்தாலும் அதை எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. எம்.பி.ஏ., முடித்த மணிரத்னம் தொழில் நிறுவன வேலைக்குச் செல்லவில்லை. ஆனால், சினிமாவை கார்ப்பரேட் கண்ணோட்டத்தோடு அணுகி, வெற்றிகர மான வியாபாரமாக்கியதில் எம்.பி.ஏ., கைகொடுத் திருக்கலாம்.

நம்மூரில் எதற்குமே லாயக்கற்றவர்கள்தான் பி.ஏ., வரலாறு படிப்பார்கள் என்று ஒரு தவறான கருத்து இருக்கிறது. ஆனால், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாறு முடித்த மாணவர்கள்தான், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அதிகம் வெற்றியடைகிறார்கள்!'' என்று முடிக்கிறார் ஃபாத்திமா வசந்த்.

தொடர்புடைய இணைப்பு: http://www.mssw.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக