அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

காய்ச்சலா குருவி ஒரு சிறப்பு பார்வை

வேதாரணியம் தாலுகா ஒரு அழகான இயற்கை  சூழலை கொண்டது, அடர்ந்த  மரங்களும்,தோப்புகளும் இப்பகுதியின் சிறப்பாகும்.
மேற்கே துளசியாபட்டினம் வரையிலும்,வடக்கே வேட்டைகரனிருப்பு வரையிலும்,வட-மேற்கே கரியாபட்டினம் வரையிலும்,கானப்படும் காட்சிகள் வேறு எங்கும் கான முடியாதவை.
   
அருகில் கோடியகாடும் ஒரு வனப்பகுதியாகும்.இங்கு அக்டோம்பேர்,நவம்பர்,டிசம்பர் மாதங்களில் வெளிநாட்டு பறவைகள் கூடும் சரணாலயமும் உண்டு..
அப்படி வரும் பறவைகளில் காய்ச்சலா குருவி என்ற ஓர் அரிய பறவையினம் உண்டு. அடைமழை பொழியும் ஐப்பசி (நவம்பர்) மாதத்தில் இக்குருவிகள் கூட்டம் கூட்டமாக வேதாரண்யம்,தோப்புத்துறை சுற்றுவட்டாரங்களுக்கு வரும்..
இதை INDIAN PITTA என்று வன அதிகாரிகள் கூறுகின்றனர்.சில பகுதிகளில் இதை "பொன்னான் தட்டான் குருவி" என்றும் கூறுகிறார்கள்.
இதை சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் பறவைகள் சரணாலயத்தில் Jewel of Jungle (காட்டின் தங்க நகை) என்று அடைமொழியுடன்  கூண்டில் வைத்துள்ளனர்.
இக்குருவிகள் இமயமலையின் அடிவாரத்திலிருந்து சுமார் 3000 கிலோமீட்டர் தூரம் பறந்து வருகின்றன.
முன்பு இவற்றை வேட்டையாடுபவர்கள் குறிவைத்து பிடிப்பார்கள்.அதிகாலை நேரங்களில் இப்பறவைகளை நான்கு பக்கமும் வாசலை கொண்ட ஓர் கூட்டை பயன்படுத்தி பிடிப்பார்கள்.
தத்தி, தத்தி நகரும் இக்குருவிகள், கூண்டிற்குள் இருக்கும் பூச்சிகளை சாப்பிட வரும்போது அகப்பட்டுக் கொள்ளும்.
10 வருடங்களுக்கு முன்பாக 10,20 குருவிகள் என மொத்தமாக பிடித்து தோப்புத்துறைக்கு விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
ஒரு நாளைக்கு தோப்புதுறையில் மட்டும் 200 குருவிகள் ,300 குருவிகள் என விற்பார்கள். இதை பொறித்து, ரசம்(சொரியானம்) வைத்து சாப்பிடுவது ஒரு சுவையாக அறியப்பட்டது.
1980 களின் இறுதி வருடங்களின் வேட்டையாடப்படும் இடங்களில் ஒரு குருவி 75 காசுக்கும், அதை தோப்புதுறையில் 1.50 க்கும் விற்பார்கள்.
பெரியகுத்தகை,புஷ்பவம்,நாலுவேதபதி உள்ளிட்ட  கிராமங்களின் தான் அதிகமாக வேட்டையாடுவார்கள்.
1990 களுக்கு பின்னால் வனத்துறையினரின் கெடுபிடி காரணமாக காய்ச்சலா குருவிகளை பிடிப்பது பெருமளவு குறைந்திருக்கிறது.
வானவில் நிறங்களை கொண்ட இக்குருவிகள் அழகாக இருக்கும். இதன் தலை முடியை பிடித்துக் கொண்டால்,அதின் உடல் ஆடிக்கொண்டு சுற்றுவதை பார்பதற்கு அழகாக  இருக்கும்.
இப்படி பிடித்து விளையாடும் பொது அதற்கு ஒரு நாட்டுபுற பாட்டு கூட உண்டு.
                                         “ஆட்டான் குருவி ஆடாதே
                                    காட்டுக்கு கரைக்கு போகாதே
                                    பிடிச்ச காட்டுல விடமாட்டேன்
                                    பிடிக்காத காட்டுல விட்டுவிடுவேன்
                                     பொன்னான் தட்டான் குருவியே
                                     பொழுது பட்டால்  வருவியே
                                     சுக்குத்தானை கண்டவுடனே
                                      சுருண்டு  சுருண்டு விழுவியே...
         என்று பாடலை பாடுவார்கள்

புழு பூச்சியை சாப்பிடும் இக்குருவிகள் புதர்களில்தான் அதிகமாக தென்படும் விசில்  சத்தம் எழுப்பினால் அருகே ஓடிவரும்,  
இக்குருவிகள் விசிலடிப்பதுப் போல் ஒசையெழுப்பும். 
இதன் உச்சன்தலை,மார்பு,விலா பகுதியில் லேசான பழுப்பு  கருண்ட மஞ்சலில் இருக்கும்.காலின் அடிப்பகுதி சிவப்பாக இருக்கும்.

இறக்கைகளில் நீலம் பச்சை நிறங்கள் இருக்கும்.இது நிலத்தில் வாழும் பறவையாகும் இதன் கண்கள் அழகாக இருக்கும் கண்களை சுற்றிலும் மைவிட்டதுப் போல் இரு கருப்பு  கோடுகள்  இதன் அழகை  கூட்டுகிறது.
அக்டோம்பேர்  முதல் மார்ச் வரை  இக்குருவிகள் இப்பகுதிகளில் தென்பட்டாலும் தீபாவளி வெடி ஓசைகளுக்கு பயந்து பறந்து விடுகின்றது.இமயமலையில் குளிர் குறைந்ததும் மீண்டும் அங்கே திரும்பிவிடுகின்றன.
வேட்டையாடுபவர்களின் குறியில் தப்பி  மீண்டும்  இமயமலைக்கு திரும்பும் இக்குருவிகள்  எண்ணிக்கை குறைவு தான் தற்போதும் ஜோடி 50 ரூபாய்  இக்குருவிகள் வேட்டையாடி விற்கப்படுகின்றன.ஆனாலும் வன அதிகாரிகளின் கடும் நெருக்கடி காரணமாக இக்குருவிகள் தற்போது பெருமளவு உயிர் தப்புகின்றன.
இந்திய வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி இக்குருவிகளை  வேட்டையாடுபவர்களுக்கு அதிகபச்சம் மூன்று ஆண்டு சிறை தண்டனையும்,25 ஆயிரம் ரூபாய் அபராதமும் தண்டனையாகும்.
காய்ச்சலா குருவி நமது விருந்தினர்கள் சிறகு முளைத்த பூக்கள் அவற்றை விருந்தாக வேண்டாமே…!

நன்றி: K.அய்யூப் Forest Dept.

1 கருத்து:

  1. இப்பதிவிற்கு நன்றி...நான் பார்த்து ரசித்த பறவைகளில் பல வண்ணங்கள் கொண்ட இக்குருவியின் நளினமான நடையும், வசீகரிக்கும் வண்ணமும் மனதை மயக்கும். இப்போது இதனைக் காண்பது அரிதாகி விட்டது.
    மக்களிடையே விழிப்புணர்வு இல்லை.

    பதிலளிநீக்கு