அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

ஆட்டோ ரிக்ஷாக்களில் அதிக குழந்தைகளை ஏற்றிச்செல்லும் டிரைவர்களின் உரிமம் ரத்து

ஆட்டோ ரிக்ஷாக்களில் அதிக குழந்தைகளை ஏற்றிச்செல்லும் டிரைவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் முனுசாமி கூறினார்.நாகை மாவட்ட கலெக்டர் முனுசாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:–
குழந்தை பாதுகாப்பு போக்குவரத்து துறை மூலம் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு அதிக பட்சமாக 3 பெரியவர்கள் அல்லது 5 பள்ளிக் குழந்தைகளை மட்டுமே ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானவர்களை ஆட்டோவில் ஏற்றக்கூடாது. அத்தகையை ஆட்டோக்களில் குழந்தைகளை, பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்க அனுமதிக்க வேண்டாம். இதை பெற்றோர் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும்.
உரிமம் ரத்து அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேலாக குழந்தைகளையோ அல்லது பயணிகளையோ ஆட்டோவில் ஏற்றிச் செல்லும் ஆட்டோவின் அனுமதி சீட்டு ரத்து செய்யவும், வாகனத்தை சிறைப்பிடிக்கவும், ஆட்டோவை ஓட்டிச் செல்லும் டிரைவர்களின் உரிமத்தை ரத்து செய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக