அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

மக்கா பெரிய மசூதியின் முன்னாள் இமாம் காலமானார்

சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் முஸ்லிம்களின் புனித ஆலயம் உள்ளது. கஃபா என்று அழைக்கப்படும் அந்த ஆலயத்தின் முன்னாள் இமாம் நேற்று முன் தினம் காலமானார்.
அஷ்ஷைக் முஹம்மத் பின் அப்துல்லாஹ் அஸ்ஸபீல் எனும் பெயருடைய அவர் நேற்றுமுன்தினம் (17/12) மரணமடைந்தார்.அல் பகீர் என்னும் கிராமத்தில் 1923 ல் பிறந்த அன்னாருக்கு வயது 89.


அரபுலகில் இஸ்லாம் மதப் பிரச்சாரகராகத் திகழ்ந்த அவர் தம் தந்தை அப்துர்ரஹ்மான் அஸ்ஸபீலிடமே கல்வி பயின்று, 1945ல் அல்பகீரியா பிரைமரி ஸ்கூலில் ஆசிரியரானார். பின்னர் 1951ல் அல்புரைதா கலாசாலையில் பேராசிரியராக நியமிக்கப்பட்ட அவர், சவூதி மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க தனது 40வது வயதில், 1963ல் மக்கா பெரிய மசூதியின் மத அறிஞராக (இமாம்) பொறுப்பேற்றார்

1968 முதல் பெரிய மசூதியின் அனைத்து இஸ்லாம் மதக் காரியங்களுக்கும் பொறுப்பாளியாக நியமிக்கப்பட்ட அவர், மூன்றாண்டுகளுக்கு பின்னர் 1971 முதல் மக்கா  மற்றும் மதீனா ஆகிய இரு பள்ளிவாசல்களின் நிர்வாகக் குழுவுக்கும்  தலைவராக நியமிக்கப்பட்டு, 29 ஆண்டுகள் அப்பொறுப்பில் செயல்பட்டார்.

பின்னர் வயது காரணமாக, அவரது சுயவிருப்பத்தின் பேரில், கடந்த 2000ம் ஆண்டு முதல், பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக