அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

ஊழல் மீதான மக்களின் கண்ணோட்டம் மாற்றியமைக்கப்படும்- மலேசியாபிரதமர்

ஊழல் மீதான மக்களின் கண்ணோட்டம் மாற்றியமைக்கப்படும்- பிரதமர்
கோலாலம்பூர், டிசம்பர் 7- மலேசியா தொடர்ந்து கையூட்டு ஊழலை தடுக்கும் முயற்சியில் இறங்கும். அதேவேளையில், CPI எனப்படும் ஊழல் தடுப்பு குறியீட்டை மேம்படுத்தும்.
“ஆசியான் நாடுகளில், ஆறு இடங்கள்  முன்னேறி ஊழல் குறைவான நாடுகளில் மலேசியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த இடத்தை நாம் இன்னும் முன்னணி வகிக்கச் செய்வோம்” என பிரதமர் வியாழக்கிழமை இரவு டுவீட்டர் அகப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Transparency International வெளியிட்டுள்ள தகவலில், ஊழல் தடுப்பு குறியீட்டில் கடந்த ஆண்டு 60-இடத்தைப் பிடித்த மலேசியா இவ்வாண்டு 6 இடங்கள் முன்னேறி 54-வது இடத்தைப் பிடித்துள்ளது குறித்து கருத்துரைத்த பிரதமர் இவ்வாறு டுவீட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
176 நாடுகள் கலந்துகொண்ட ஊழல் இல்லாத நாடுகளின் பட்டியலில், மலேசியாவுக்கு 100-இல் 49 புள்ளிகள் கிடைத்துள்ளன. மேலும், ஆசியான் நாடுகளில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த சிங்கப்பூரையும், 46-வது இடத்தைப் பிடித்துள்ள புருணையையும் முந்தி மலேசியா 3-வது இடத்தைப் பிடித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக