அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையைக் கிளப்ப VHP முடிவு

 

அலகாபாத் 17/02/2013
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று ஏற்கனவே பாபர் மசூதியை இடித்து வன்முறைக்கு வழி வகுத்து, நாட்டை சுடுகாடாக்கியது போதாதென்று தற்போது மீண்டும் ராமர் கோவில் பிரச்சனையைக் கையில் எடுக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரச்சினையை தீவிரப்படுத்த விஷ்வ ஹிந்து பரிஷத் முடிவு செய்துள்ளது. சமீபத்தில் அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவில் சாதுக்கள் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்த கூட்டத்தில் நாடு முழுவதிலும் இருந்து விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற வட தமிழக பொறுப்பாளர் ஸ்ரீனிவாசன், இதுகுறித்து கூறுகையில், ராமஜென்ம பூமியான அயோத்தியில் ராமருக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்பதில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் இந்து அமைப்புகள் உறுதியாக உள்ளன.

கும்பமேளாவின் போது கங்கை நதிக்கரையில் நடந்த சாதுக்கள் மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புனித பூமியான ராமஜென்ம பூமியை ஒட்டி மாற்று மத சிந்தனைக்கு இட மளிக்கும் வகையில் எந்த விதமான கட்டுமானங்களையும் அனுமதிக்கப் போவதில்லை.

பாராளுமன்றத்தில் சட்டம், கொண்டு வந்து சோமநாதர் ஆலயம் எழுப்பப்பட்டது போல் அயோத்தியில் ராமர் ஆலயம் கட்ட பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் ஆதரவு திரட்ட திவிர பிரசாரத்துக்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் பொது மக்கள் வீடுகளிலும், கோவில்களிலும் பல்லாயிரம் கோடி ராம நாம ஜெபம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வேள்வி ஏப்ரல் 11 முதல் மே 12 வரை நடைபெறும். இதற்காக வீடு வீடாக ராம நாம மந்திரம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படும். இந்த வேள்வியின் போது நாடு முழுவதும் துறவியர்கள் பிரசாரப்பயணம் மேற்கொள்வார்கள்.

தமிழகத்தில் இதை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க மார்ச் 1-ஆம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் செயற்குழு கூடுகிறது என்று ஸ்ரீனிவாசன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக