அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் முற்றுகை



இலங்கையில் இறுதிப் போருக்குப் பின் சிறைப் பிடிக்கப்பட்ட பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், அவரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கை ராணுவத்தால் சுட்டுக் ல்லப்பட்டிருக்கிறார். ஈவு இரக்கமற்ற இப்படுகொலை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இக்கொடுஞ்செயலைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி தலைமையில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக, குனங்குடி அனீஃபா, இயக்குனர் புகழேந்தி, மே பதினேழு இயக்கத் தோழர்கள் உள்ளிட்டோர் 
கலந்துகொண்டனர். 

இந்த போராட்டத்தில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி :

இலங்கையில் இனவெறி கொண்ட ராஜபக்சே அரசு தமிழீழ மக்களை போர் என்ற பெயரில், கொடூர கொலை செய்து அழித்தது. தற்போது விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரனை படுகொலை செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதை மனசாட்சியுள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். 2009 மே-19 அன்று ஐந்து மெய்க்காவலர்களோடு சரணடைந்த பாலச்சந்திரனை கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் கொடூரமாக கொலை செய்துள்ளது ராஜபக்சே அரசு. பிரபாகரனின் வம்சத்தில் யாரும் இருக்கக்கூடாது என்பதே அவர்களது எண்ணம். ராஜபக்சேவை சர்வதேச குற்றவாளிக் கூண்டில் ஏற்றவேண்டும் என்றால் உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றினைந்து போராட முன்வர வேண்டும். அடுத்த மாதம் மேற்கத்திய நாடுகள் ஜெனிவாவில் கொண்டுவரும் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தை இந்திய அரசு சமரசமின்றி ஆதரிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வற்புறுத்துகிறதுஎன்றார்.

போராட்டத்தின் போது ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட முன்னேறிய போது, பாதுகாப்புக்குப்பிற்கு நின்ற காவல்படையினர் அவர்களை தடுத்து கைது செய்தனர்.

THANKS-NAKKEERAN NEWS

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக