அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

வீர‌ப்ப‌ன் கூ‌ட்டா‌ளிக‌ள் 4 பேரை ‌தூ‌க்‌கி‌லிட தடை- உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் அ‌திரடி

டெல்லி  18/02/2013
வீர‌ப்ப‌ன் கூ‌ட்டா‌ளிக‌ள் ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் 4 பேரையு‌ம் நாளை மறு‌தின‌ம் வரை தூ‌க்‌‌கி‌லிட உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தடை ‌வி‌தி‌த்து‌ள்ளது.


கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த பாலாறு கண்ணிவெடி விபத்தில் வனத்துறை, காவல்துறை அதிகாரிகள் உள்பட 22 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர்.

இந்த வழக்கில், சந்ததன கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகளான ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன் மற்றும் பிலவேந்திரன் ஆகியோர் குற்றம் சா‌ற்றப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டனர்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இவர்களின் கருணை மனுவினை குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, கடந்த 11 ஆம் தேதி நிராகரித்தார். இதனையடுத்து கர்நாடகாவில் உள்ள பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் 4 பேருக்கும் அடுத்த 14 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் வெளியானது.

இத‌னிடையே வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட மனுவினை அவசர மனுவாக ஏற்க முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், நே‌ற்று மு‌ன்‌தின‌ம் மறுத்துவிட்டதை அடுத்து இன்று இந்த மனு தாக்கல் செய்யப்ப‌ட்டது.

இ‌ந்த மனுவை ‌விசா‌ரி‌த்த உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம், ‌வீர‌ப்ப‌ன் கூ‌‌ட்டா‌ளிக‌ள் 4 பேரையு‌ம் வரு‌ம் புத‌ன்‌கிழமை வரை தூ‌க்‌கி‌லிட இடை‌க்கால தடை ‌வி‌தி‌த்து‌ள்ளது. அ‌ன்று வழ‌க்கை ‌விசாரணை‌க்கு எ‌டு‌த்து‌க் கொ‌ண்டு‌ள்ளது.

வீர‌ப்ப‌ன் கூ‌ட்டா‌ளிக‌ள் ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆ‌கியோரை தூ‌க்‌கி‌லிட க‌ர்நாடக ம‌ா‌நில‌ம் பெ‌ல்கா‌ம் ‌சிறை‌யி‌ல் ஏ‌ற்பாடுக‌ள் செ‌ய்ய‌ப்ப‌ட்டு வ‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக