அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

ஆசிட் வீச்சில் கண்பார்வை பாதிக்கப்பட்ட பெண் என்ஜினீயர் வினோதினிக்கு பிரதமரின் நிவாரண நிதி மத்திய மந்திரி நாராயணசாமி வழங்கினார்

 

ஆசிட் வீச்சில் கண்பார்வை பாதிக்கப்பட்ட காரைக்காலை சேர்ந்த பெண் என்ஜினீயர் வினோதினிக்கு பிரதமரின் நிவாரண நிதியை மத்திய மந்திரி வி.நாராயணசாமி வழங்கினார்.
காரைக்கால் எம்.எம்.ஜி. நகர், என்ஜினீயர்ஸ் கார்டனை சேர்ந்தவர் ஜெயபாலன். இவரது
மகள் வினோதினி (வயது 23). சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர் சென்னைக்கு செல்லும் போது திடீரென்று அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர், அவரது முகத்தில் ஆசிட்டை ஊற்றி விட்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த வினோதினி, உடனடியாக புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆசிட் வீச்சில் இளம்பெண் வினோதினியின் முகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவரது இரண்டு கண்களிலும் பார்வை பறிபோனது. தற்பொழுது முதற்கட்டமாக அவருக்கு முகத்தை சீரமைப் பதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிகிச்சைகள் முடிவடைந்த பின்னர் அவருக்கு கண்பார்வை கிடைப்பதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்நிலையில் புதுச்சேரி அரசு சார்பில் முதல்-அமைச்சர் ரங்கசாமி ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்திருந்தார். பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி பெற்றுத் தருவதாக மத்திய மந்திரி வி.நாராயணசாமி உறுதி அளித்திருந்தார். அதன்படி பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வினோதியினின் தந்தை ஜெயபாலனிடம் மத்திய மந்திரி வி.நாராயணசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் வி.வைத்திலிங்கம், காரைக்கால் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.என்.திருமுருகன், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஏ.வி.வீரராகவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக