அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

யார் இந்த 24 கூட்டமைப்பு? இவர்களின் சாதனை என்ன?

மிழக முஸ்லிம்கள் 1995க்கு முன்னாள் அதிகாரவர்க்கங்களின் அடக்கு முறைகளையும், அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகளையும், காவியவாதிகளின் கொடூர தாக்குதல்களையும் எதிர்கொண்டு திக்குமுக்காடியது. அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் வருகைக்கு பின்னால் முஸ்லிம் சமுதாயம் அந்த தலைமையின் கீழ் ஒன்று கூடியது என்று சொல்லும் அளவிற்கு சமூகம் கட்டுக்கோப்பாக ஒன்றினைந்து குரல் கொடுக்க ஆரம்பித்தது.
அதன் பின் தனது  உரிமைகளுக்காக வீரியத்தோடு சமுதாயம் களம் அமைத்தாலும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக முஸ்லிம் இயக்கங்கள், கட்சிகள் முழைக்க ஆரம்பித்துவிட்டன. அடக்கமுறைகளை சமுதாயம் சந்தித்தபொழுதெல்லாம் அமைதிகாத்தவர்கள் கூட பின்னாலில் வீரவசனம் பேசி தனி இயக்கமாக வருகை தந்தார்கள். இப்படி முஸ்லிம் சமுதாயத்தில் இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் பஞ்சமில்லை என்கிற அளவிற்கு இன்றயை சூழ்நிலை இருக்கின்றது எனலாம்.
இந்நிலையில் கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திருமணப்பதிவுச்சட்டம் முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்தில் கை வைப்பது போன்ற சர்ச்சைகள் உருவாகின. அப்போது சிலர் விளக்கமளித்தாலும் அதில் உள்ள தவறுகளை சரிசெய்யவும், பள்ளிவாசலின் ஜமாத்துகளால் பதியப்படும் பதிவுகளை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வண்ணம் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகள் ஒன்றினைந்து அன்றைய சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து முறையிட்டனர். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இப்படியாக உருவான இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு பின்னாலிள் சமுதாயத்தின் பொதுவான முக்கிய கோரிக்கைகளுக்காக ஒன்றினைந்து குரல் கொடுக்க ஆரம்பித்தன.  

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு திருமணம் நடைபெற்ற போது அந்த மாவட்டத்தினுடைய ஆட்சித்தலைவரின் பேரில் அத்திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. திருமணவயதை எட்டாத நிலையில் இத்திருமணத்தை நடத்துவதற்கு அரசு அனுமதியளிக்காது என்று கூறப்பட்டது. ஆனால் முஸ்லிம்களின் ஷரீஅத் சட்டத்திற்கு இது முரணனானதாக இருந்தது. இந்தியாவில் மிக உயர்ந்த நீதி பரிபாலன சபையான உச்சநீதிமன்றம் கூட முஸ்லிம்களின் ஷரீஅத் சட்ட அடிப்படையில் திருமணம் நடத்த அனுமதியளித்திருந்தது. அதையும் மீறி  பெரம்பலூரில் மாவட்ட ஆட்சி தலைவர் அத்துமீறி நடவடிக்கை என்ற பெயரில் அந்த பெண் கைது செய்யப்பட்டு மகளிர் பாதுகாப்பு மைய்யத்திற்கு அனுப்பபட்டார். இதனை கண்டித்து இந்த கூட்டமைப்பு களம் இறங்கியது. உடனடியாக பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது. அதன் அடிப்படையில் கூட்டமைப்பில் அங்கம் வகித்த இயக்கங்கள் மற்றும் கட்சிகள் தங்களது கொடிகளோடு சாரை சாரையாக அணிவகுத்தனர். கண்டன ஆர்ப்பாட்டம் ஒரு மாநாடு போல் காட்சியளித்தது. கோரிக்கையின் பக்கம் அரசு, மற்றும் மீடியாக்களின் கவனம் திருப்பபட்டது.

அமெரிக்காவில் உள்ள ஒரு யூதனால் நம் உயரினும் மேலான நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி காமூகனாக சித்தரித்து திரைப்படம் வெளியிடப்பட்டது. இதனை கண்டித்து உலகமே கொந்தளித்த நிலையில் தமிழகத்தில் சில இயக்கங்கள் தனித்தனியே ஆர்ப்பாட்டம் நடத்தின. ஆனாலும் முஸ்லிம்களின் கூட்டமைப்பும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு கொடுத்தது. அழைப்பை ஏற்ற இயக்கங்களும், முஸ்லிம்களும் சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையே திணறிடித்தார்கள். சென்னை முடங்கின,ஒட்டுமொத்த மீடியாக்களும் அண்ணா சாலையிலேயே குவிந்தன. முக்கிய தொலைக்காட்சிகள் நேரடி ஒலிபரப்பு செய்தன. தமிழகத்தின் தலைநகரம் பல மணிநேரம் முடக்கப்பட்டது. இதனால் தமிழகமே பரபரப்புக்குள்ளானது. காவல்துறை முழிபிதுங்கி விழித்தார்கள். கூட்டம் கட்டுக்கடங்காமல் போனாதால் காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முற்பட்டது. அந்தளவிற்கு மக்கள் வெள்ளம் சென்னையின் மைய்யப்பகுதியை மூழ்கடித்தது. இந்த சம்பவத்திற்கு பின்னால் காவல்துறை டி.ஜி.பியே மாற்றப்பட்டார் அந்தளவிற்கு இந்த சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்து பல படங்கள் தங்களது விஷமத்தை கக்கியிருந்தாலும்,  துப்பாக்கி திரைப்படம் இன்னும் ஒரு படி மேலே சென்று ரானுவத்தில் உள்ள முஸ்லிம்களை சந்தேகிக்கும் அளவிற்கு காட்டப்பட்டது. தொடர்ந்து சினிமாக்களில் முஸ்லிம்கள் வஞ்சிக்கப்பட்டே வந்த நிலையில் துப்பாக்கி திரைப்படம் முஸ்லிம்களால் எதிர்ப்பை சந்திக்க நேரிட்டது. இந்த பிரச்சனையில் உடனடியாக களம் அமைத்த கூட்டமைப்பு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. துப்பாக்கி படக்குழுவினர் கூட்டமைப்பு நிர்வாகிகளை சந்திக்க அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு முஸ்லிம்களை பாதிப்புக்குள்ளாக்கும் சில காட்சிகளை நீக்க படக்குழுவினர் ஏற்றுக்கொண்டு கூட்டாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியும் அளித்தனர்.

அதன்பின் கமலின் தயாரிப்பிலும், இயக்கத்திலும் வெளியாக இருந்த விஸ்வரூபம் படம் இன்னும் முஸ்லிம்களை அதிகம் காயப்படுத்துவது போல் அமைந்திருப்பதாக தகவல் வந்ததையடுத்து இஸ்லாமிய கூட்டமைப்பினர் கமலை நேரடியாக சந்தித்து விளக்கம் கேட்க முற்ப்பட்டனர் ஆனாலும் கமல் சந்திக்காமல் காலம் தாழ்த்தியே வந்தார். படம் ரீலிஸாகும் சில தினங்களுக்கு முன்புதான் கமலை அவரது அலுவலகத்தில் முஸ்லிம் கூட்டமைப்பினர் சந்திக்கின்றனர். முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாகவே சென்றது அந்த சந்திப்பில் பல நிகழ்வுகளை பரிமாறிக்கொண்டாலும் கூட்டமைப்பினரின் சார்பில் வைக்கப்பட்ட மிக முக்கிய கோரிக்கை படத்தை எங்களுக்கு முன்பாக காட்டவேண்டும் என்பதுதான். கமல் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டாலும் தனது ஆரிய சூழ்ச்சியை பயன்படுத்தி காலத்தாமதத்தை ஏற்படுத்தினார். படம் வெளிவருவதற்கு அற்ப சில தினங்களே உள்ள நிலையில்தான் படம் அவரது அலுவலகத்தில் வைத்து முஸ்லிம் கூட்டமைப்பினருக்கு காண்பிக்கப்பட்டது.

படத்தை பார்த்த இஸ்லாமியர்கள் வாயடைத்துபோனார்கள். இந்தளவிற்கு மற்ற சினிமாக்களில் இஸ்லாமியர்களை புண்படுத்தவில்லை என்கிற அளவுக்கு விஸ்வரூபம் முஸ்லிம்களை இழிவுபடுத்தியிருந்தது. இதனால் நொந்துபோன முஸ்லிம் இயக்க தலைவர்கள் கமலிடம் ஒன்றுமே பேசாமல் திரும்பி வந்துவிட்டனர். அன்றைய தினமே தங்களுக்குள் ஆலோசனை கூட்டத்தை நடத்திவிட்டு மறுநாள் காலையில் காவல்துறை தலைவரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்து விஸ்வரூம் படத்திற்கு தடைவிதிக்க கோரினர். அடுத்தநாள் உள்துறை செயலாளரை சந்திதுத்து இதே கோரிக்கையை வலியுறுத்தினர். படமும் நாளை வெளிவரப்போகிறது என்று இருந்த நிலையில் கடும் எதிர்ப்புகளை முஸ்லிம்கள் வெளிப்படுத்தினர் உடனாடியாக விழித்துக்கொண்ட தமிழக அரசு விஸ்வரூபம் படத்திற்கு 15 நாட்கள் தடை விதித்தது. தமிழக அரசின் தடையாலும் இஸ்லாமிய கூட்டமைப்பினரின் கடும் முயற்சியாலும் தமிழகம் அல்லாது உலகம் முழுவதும் விஸ்வரூபம் பிரச்சணையின் எதிரொலி கிளம்பியது. பல்வேறு நாடுகளில் படத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. தமிழகத்தில் விஸ்வரூபம் படப்பிரச்சணை மிகப்பெரும் புயலை கிளப்பிவிட்டது எனலாம் அந்தளவிற்கு பல தினங்கள் இதே பேச்சாகத்தான் இருந்தன. அதன் பின் இதில் தமிழக அரசின் தலையீட்டால் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக முடிவு எட்டப்பட்டது. படத்தின் சில காட்சிகளும் நீக்கப்பட்டு படம் ரிலீஸுக்கும் வந்தது.

இப்படியாக சமுதாயத்தின் முக்கிய பிரச்சணைகளில் களம் இறங்கும் கூட்டமைப்பு பல சூழ்ச்சிகளையும் முறியடித்து சாதனைப்படிகளை தொட்டு வருகிறது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே…..

திருமணப்பதிவுச்சட்டம் சர்ச்சையின் போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் இந்த கூட்டமைப்பில் அங்கம் வகித்திருந்தது. அதன் பின் ஏனோ கூட்டமைப்பில் அது இடம் பெறவில்லை. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கூட்டமைப்பில் இடம் பெறாவிட்டாலும் விஸ்வரூபம் பிரச்சனையில் கூட்டமைப்பின் முடிவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்திருந்தது. இப்படி கொள்கையால் வேறுபட்டு நின்றாலும் முக்கிய கோரிக்கைகளுக்கு ஒருமித்து குரல் எழுப்பினால் அதனின் வலிமை பலம் பொருந்தியதாக இருக்கும் என்று கருதி இறைவன் நாடினால் இந்த இயக்கங்களும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்க வேண்டும் என்பதுதான் எல்லோரின் அவா. இவர்களும் கூட்டமைப்பில் ஒருங்கிணைந்து செயல்பட எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் பிரார்த்திப்போம்….

இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகள்:


1.  தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை

2.  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

3.  இந்திய தவ்ஹீத் ஜமாத்

4.  மனிதநேய மக்கள் கட்சி

5.  பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா

6.  இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்

7.  வெல்பர் பார்ட்டி ஆப் இந்தியா

8.  எஸ்.டி.பி.ஐ கட்சி

9.  சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை

10. அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்

11. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்

12. ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்

13. தேசிய லீக்

14. ஆல் இந்தியா மில்லி கவுன்சில்

15. இந்திய தேசிய லீக்

16. ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் அர்சத் மதனி

17. ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் மஹ்மூத் மதனி

18. தமிழ் மாநில தேசிய லீக்

19. தாருல் இஸ்லாம் பவுண்டேசன் ட்ரஸ்ட்

20. தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்

21. இஸ்லாமிய இலக்கிய கழகம்

22. ஐக்கிய சமாதான பேரவை

23. ஷரீஅத் பாதுகாப்பு பேரவை

ஆகிய இயக்கங்களையும் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவராக மெளலானா A.E.M.அப்துல் ரஹ்மான் மிஸ்பாஹி அவர்களும், ஒருங்கிணைப்பாளராக A.K.M.முஹம்மது ஹணீபா அவர்களும் செயல்பட்டு வருகிறார்கள்.

முகவரி

தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு

33/2, மூக்காத்தாள் தெரு,

புரசைவாக்கம், சென்னை – 7

போன் – 0091 9884390392

Courtesy: Muslim student Front(MSF)@Thopputhurai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக