அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

ஆமை வேக ஸ்பீட் போஸ்ட்: அப்சல் குரு குடும்பத்திற்கு திங்களன்று போய் சேர்ந்த கடிதம்!

காஷ்மீர்  14/02/2013
னிக்கிழமையன்று திகார் ஜெயிலில் தூக்கில்டப்பட்ட அப்சல் குரு, தூக்கிலிடப்படும் செய்தி அடங்கிய ஸ்பீட் போஸ்ட் மிகவும் ஸ்பீடாக இன்று போய் அவரது குடும்பத்தினரிடம் சேர்ந்துள்ளது!! ஸ்பீட் போஸ்டின் ஸ்பீட் இதுவென்றால் சாதாரண போஸ்ட் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்!  திகார் ஜெயில் அதிகாரி, அப்சல் தூக்கி‌லிடப்படும் தகவல் அடங்கிய கடிதம் 11/02/13 திங்களன்று  போய் சேர்ந்துள்ளது! இதைவிடக்கொடுமை, இந்தக் கடித‌ம் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட அன்று மாலை ஜம்மு காஷ்மீர் தபால் நிலையத்திற்கு கிடைத்துள்ளது.கடிதத்தில் அப்சல் குருவின் கிராமத்தின் முகவரி இருந்துள்ளது.


"கடிதத்தை நாங்கள் வாங்க முதலில் மறுத்தோம், ஆனால் உறவினர்கள் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம் என்று கூறினார்கள், அதனால் வாங்கினோம். தூக்கிலிடப்பட்டு உடலும் புதைக்கப்பட்ட பிறகு தூக்கிலிடப்படும் செய்து எங்களுக்குக் கிடைத்து என்ன பயன்" என்று அவரது குடும்பத்தினர் நியாயமான கோபத்துடன் கேட்கின்றனர்.

உள்துறை அமைச்சகம் அன்று வாய்கிழிய தொலைக்காட்சியில் அப்சல் குருவின் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியதாக கூறிவந்தது. இப்போது குட்டு உடைந்தது.

மற்றொரு வேதனையான வேடிக்கை என்னவெனில், அரசு தரப்பில் பிப்ரவரி 6ஆம் தேதியே அப்சல் குரு குடும்பத்திற்கு தூக்கிலிடப்படும் செய்தியை ஸ்பீட் போஸ்டில் அனுப்பிவிட்டோம் என்று கூறியிருந்தது. ஆனால் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தின் உறையில் உள்ள ஸ்டாம்பில் 8ஆம் தேதி என்று முத்திரை குத்தப்பட்டிருந்தது.

இப்போது இந்தக் கடிதம் கையில் கிடைப்பது மிகவும் கொடூரமான நகைச்சுவை என்று அப்சல் குடும்பத்தினர் வேதனையுடன் கூறியுள்ளனர். வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல் உள்ளது இந்த செயல் என்று அப்சல் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக