அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

சென்னையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பழ.நெடுமாறன், வைகோ, ஜவாஹிருல்லாஹ் கைது


சென்னை: இலங்கை தமிழர் நலன் காக்க பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் உள்ள  ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மே 17 இயக்க அமைப்பாளர் திருமுருகன்,மனிதநேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், இனப்படுகொலையை தடுக்க தவறியதாகதற்காகவும் சென்னை அடையாறில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று மே 17 இயக்க அமைப்பாளர் திருமுருகன் அறிவித்து இருந்தார். ஆனால் காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி இருந்தனர், மேலும் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
மே 17 இயக்க அமைப்பாளர் திருமுருகன், பழ. நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மனித நேய மக்கள் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் ஏராளமானோர் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் காவல்துறையினர் லேசாக தடியடி நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்தனர்.  மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பழ.நெடுமாறன், வைகோ, ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வேல்முருகன் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
போராட்டத்தின் போது ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளரின் உருவ பொம்மை மற்றும் ஐ.நா. சபையின் கொடி எரிக்கப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அடையாறு பகுதி  பரபரப்பாக காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக