அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

சிங்கப்பூர் மக்கள் தொகை வெள்ளை அறிக்கைக்கு எதிர்ப்பு – ஆர்ப்பாட்டம்!




சிங்கப்பூர் மக்கள் தொகை வெள்ளை அறிக்கைக்கு எதிர்ப்பு – ஆர்ப்பாட்டம்!சிங்கப்பூர்: சிங்கப்பூரின் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மக்கள் தொகை மீதான வெள்ளை
அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை பேச்சாளர்கள் சதுக்கத்தில் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால், தற்போதைய பொருளாதார வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக, வெளிநாட்டினரை அனுமதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இப்போது 53 லட்சமாக உள்ள மக்கள் தொகையை 2030ல் 69 லட்சமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகையை அதிகரிப்பது தொடர்பான திட்டத்துக்கு நாடாளுமன்றம் பிப்ரவரி 8ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.. அரசின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை பேச்சாளர்கள் சதுக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இளம் சிங்கப்பூரர்கள், வலைப்பூ எழுத்தாளர்கள், எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட 12 பேர் பேசினார்கள்.

துவக்க உரையாற்றிய தேசிய ஒருமைப்பாட்டு கட்சி உறுப்பினர் ரவி ஃபிலேமன், “பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளிநாட்டவர் எண்ணிக்கையை  ஒன்பது இலட்சம் முதல் 10 இலட்சம் வரை அதிகரித்தால் அது ஏற்றுக் கொள்ளக்கூடியது இல்லை என்ற அவரின் கூற்றை கூட்டத்தினர் ஆமோதித்தனர். இந்த ஆர்ப்பாட்டதின் பேச்சாளர்களில்  சிங்கப்பூர் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்ட டான் கின் லியனும் ஒருவர் ஆவார்

சிறப்பான நிர்வாகம் நடைபெற்று வரும் சிங்கப்பூரில் அரசுக்கு எதிராக இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நடைபெறுவது மிகவும் அரிதான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக