அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

ஆயிரம் ஆண்டுகள் நினைவு சின்னமாக இருக்கும் கோடியக்கரை கலங்கரை விளக்கம்

 
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 35 சதுர கிலோ மீட்டரில் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இதன் எதிரே பறவைகள் சரணாலயமும் உள்ளன. இந்த வனவிலங்கு சரணாலயத்தில் மான், குதிரை, நரி, குரங்கு, முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.


பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு நாடுகளிலிருந்து 247 வகையான பறவைககள் இங்கு அக்டோபர் முதல் மார்ச் வரை வந்து தங்கி செல்கின்றன. வனவிலங்கு சரணாலயத்தில் 1939-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் ஒன்றும் கோடியக்கரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் ஒன்றும் உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் அருகே கடல் பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் இடிந்த நிலையில் இருந்தது. கடந்த 2004-ம் ஆண்டு சுனாமியின்போது இதன் ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டது.

கோடியக்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம், கலங்கரை விளக்கம் ஆகியவற்றை பார்த்து செல்கின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கலங்கரை விளக்கத்தை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசிக்கின்றனர். இந்த கலங்கரை விளக்கம் கடற்கரையை யொட்டி இருப்பதால் தண்ணீர் அடித்து மெல்லமெல்ல அழிந்து வருகிறது.

இந்த ஆயிரம் ஆண்டு நினைவு சின்னமான இந்த கலங்கரை விளக்கத்தை சுற்றி காங்கீரிட் சுவர் அமைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோடியக்கரை மக்கள் கலெக்டருக்கும், வனத்துறை யினருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.


B.Mohamed Jazar. M.B.A

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக