அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

சார் ஒரு நிமிசம்: நாமிருப்பது இந்தியாவா? பாரதமா?


சார் ஒரு நிமிசம்: நாமிருப்பது இந்தியாவா? பாரதமா?பஞ்சாபைச் சார்ந்த காவலாளிகள் இருவருக்கு அகாலிதளம் கட்சி "மாவீரர்" பட்டமும், "மதநம்பிக்கைக்காக உயிர்நீத்த தியாகிகள்" பட்டமும் வழங்கி கவுரவித்துள்ளது.
1984 ஆம் ஆண்டு அக்டோபர்-31 ஆம் தேதி அப்போதைய இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அவரது மெய்க்காவலர்கள் இருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரைச் சுட்டுக்கொன்ற சத்வன் சிங் மற்றும் பியாந்த் சிங்கிற்குத்தான் அகாலிதளம் மேற்கண்ட பட்டங்களை வழங்கி கவுரவித்துள்ளது!
அகாலி தளம் கட்சி, சீக்கியர்களுக்கான கட்சி என்பதும் தேர்தலில் போட்டியிடுவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற கட்சி என்பதும் நாம்  அறிந்ததே. இக்கட்சியின் தலைவர்கள் சீக்கிய மத அடிப்படைவாதிகள் என்பதோடு, இன்னொரு மத அடிப்படைவாதக் கட்சியான பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர் என்பதும் யாரும்  அறியாத விசயமன்று.. பாஜகவின் தாய்க்கட்சியான இந்து மஹாசபையின் தீவிர(வாத) உறுப்பினர்களுள் ஒருவனான நாதுராம் கோட்சே, நாடே போற்றும் காந்தியைச் சுட்டுக்கொன்றவர் என்பதும் பழைய வரலாறு. கோட்சேவுக்கு ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்துபவர்கள் இந்தியாவில் மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மற்றும் உயர் பதவிகளில் இருப்பவர்களாகவும் உள்ளனர்.

தேசப்பிதாவாக போற்றப்பட்டவரையும் பிரதமரையும் சுட்டுக்கொண்டவர்களைப் போற்றுவதில்  பாஜகவும் அகாலிதளம் கட்சியும் கொள்கையளவில் ஒத்துப்போகின்றன என்பதோடு காங்கிரஸுக்கு எதிரான கொள்கை கொண்டவர்கள் என்பதால் ஒரே கூட்டணியில் உள்ளதும் ஆச்சரியப்படக்கூடியதன்று..!

மும்பை தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ரகசியமாகத் தூக்கிலிடப்பட்ட அஜ்மல் கசாபுக்கும் யாராவது "மாவீரர்" பட்டமோ அல்லது மத நம்பிக்கைக்காக உயிர் நீத்த தியாகி பட்டமோ வழங்கினால் என்னாவது?

அப்படி வழங்க வேண்டாம்; சும்மா பேசவோ அல்லது முகநூல், டிவிட்டரில் கருத்திடவாவது முடியுமா?
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் ஸ்லீப்பர் செல்லாகச் செயல்பட்டு ஹேமந்த் கார்கரேவின் தீவிர புலனாய்வு காரணமாக உலகிற்கு அடையாளம் காட்டப் பட்ட காவித் தீவிரவாதி பிரக்யா சிங்தாகூரைச் சிறையில் சந்தித்தார் உமா பாரதி. இருவருக்கும் பெரிய வித்தியாசம் இல்லையெனினும் அஜ்மல் கசாப்பை அம்மதத்தைச் சேர்ந்தவர் ஒருவர் சிறைக்குச் சென்று சந்தித்து இருந்தால் அவரின் தேசப் பற்று குறித்து எத்தகைய சர்ச்சைகள் கிளம்பி இருக்கும் என்பதும் நாம் அறியாததன்று!

அட!  தெரியாமத்தான் கேட்கிறேன். தேசப்பிதாவையும் பிரதமரையும் படுகொலை செய்தவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட்டு மத்திய/மாநில அரசுகளில் பதவி வகிக்கும் உரிமை உள்ளதா? பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் இக்கட்சிகளின் தேர்தல் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?

நாமிருப்பது இந்தியாவா? பாரதமா? ஒன்றுமே புரியவில்லை சார்!
- பஞ்ச் கல்யாணி!

Thanks-inneram

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக