அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

பொது இடங்களில் சிலை வைக்க அனுமதி கிடையாது: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: பொது இடங்களில் சிலைகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என  அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுகு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில், கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு தலைவரின்  சிலையை நிறுவ அம்மாநில அரசு அனுமதி அளித்திருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த  நீதிபதிகள் ஆர்.எம். லோதா, எஸ்.முஹோபாத்யா ஆகியோரடங்கிய அமர்வு,  இனிமேல்  பொது இடங்கள், சாலைகள்  அல்லது எந்த ஒரு பொது இடத்திலும் சிலைகளை நிறுவ  கேரள அரசு அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட்டது.

மேலும் இதே கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச  அரசுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக