அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்

 நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2013 ஜனவரி தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் சிறப்பு சுருக்க திருத்த துணை வாக்காளர் பட்டியல் மாவட்ட வருவாய் ஆய்வாளர் திருமதி .ஆசியா மர்யம் நேற்று வெளியிட்டார்
. பின்னர் அவர் கூறியதவது மாவட்டத்தில உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் தகுதி உள்ளவர்கள் வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாதவர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு அனைத்து வாக்குசாவடி மையங்களில் வெளியிடப்பட்டுள்ளது.நமது மாவட்டத்தில் 11,26,292 வாக்காளர்கள்  (ஆண்-5,64,911, பெண்-5,61,380) உள்ளனர் என்றும், தற்பொழுது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலிலும் தகுதி உள்ளவர்கள் இடம்பெறவில்லைஎனில் தொடர் சிறப்பு சுருக்க திருத்தத்தின்போது அந்ததந்த வாக்குசாவடி மையங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்.

-நமது செய்தியாளர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக