அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

சென்னை, கொழும்பு, சார்ஜாவுக்கு திருச்சியிலிருந்து கூடுதல் விமானம்


 
திருச்சியிலிருந்து சென்னை, கொழும்பு, சார்ஜாவுக்கு விரைவில் கூடுதல் விமான சேவை துவங்க உள்ளது என விமானநிலைய இயக்குநர் தர்மராஜ் தெரிவித்தார்.

இந்தியாவின் 64வது குடியரசு தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகல மாக கொண்டாடப்பட் டது. திருச்சி ஏர்போர்ட்டில் நடந்த விழாவில் விமானநிலைய இயக்குநர் தர்மராஜ், தேசியக்கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
திருச்சி விமானநிலை யம் படிப்படியாக நல்ல வளர்ச்சியினை பெற்று வரு கிறது. தற்போது சர்வதேச தரத்திற்கு உயர்ந்து விட்டது. எனினும் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இங்கு வரக்கூடிய பயணிகளுக்கு உலகத் தரத்திலான வசதிகளை செய்து தர வேண்டும். இதற்காக விமானநிலையத்தின் அனைத்து பிரிவுகளையும் மேம்படுத்த வேண்டும்.
இதுதவிர திருச்சி விமானநிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் மிக கட்டாயமான, அவசிய மான ஒன்றாக உள்ளது. எனவே அந்த பணியை துரிதப்படுத்த வேண்டும். பயணிகள் வளர்ச்சி விகி தத்தை 2012&2013ம் ஆண் டில் 20 சதவீதம் உயர்த்தி சாதனை புரிய வேண்டும். சர்வதேச தரத்திற்கு உயர் ந்து விட்டதால் பல விமான நிறுவனங்கள் திருச்சியிலிருந்து பிற நகரங்களுக்கு விமான சேவை தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன.
ஏர் ஏசியா விமான நிறு வனம் கோலாலம்பூருக்கு கூடுதல் சேவை அளிக்க துவ ங்கியுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திருச்சியிலிருந்து சென்னைக்கு மீண்டும் விமானத்தை இயக்குகிறது. அந்த நிறுவனம் சார்பில் விரைவில் திருச்சியிலிருந்து கொழும்புக்கு விமான சேவை துவங்க உள்ளது. அதேபோல் ஜெட் ஏர் வேஸ் நிறுவனம் விரைவில் திருச்சி& சென்னை இடையே கூடுதல் விமான சேவை துவங்க உள்ளது. ஏர் அரேபியா நிறுவனம் வரும் பிப்ரவரி முதல் திருச்சி&சார்ஜா இடையே விமான சேவை அளிக்க திட்டமிட்டு வருகிறது. இது போல் பல நிறுவனங்கள் திருச்சியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு விமானங் களை இயக்குவது தொடர் பாக ஆய்வு செய்து வருகின்றன.
அதற்கேற்ப விமான நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட உள்ளன. இதன்படி விமானநிலைய இயக்கக கட்டுப்பாட்டு மையம் (ஏர்போர்ட் ஆபரே சன் கன்ட்ரோல் சென்டர்) விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதுதவிர விமானநிலைய அலுவலர்கள், பணியாளர்கள் ஏர்போர்ட் டெர்மினலுக்குள் வந்து செல்லும் போது மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு சோதனையை மேம்படுத்தும் நோக்கில் பயோ மெட்ரிக் சிஸ்டம் கொண்டுவரப்பட உள்ளது. அதேபோல் சிஐஎஸ்எப் பிரிவினருக்கான மோப்பநாய் பிரிவும் தொடங்கப்பட உள் ளது. இதற்கான கட்டிடங் கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் பயணிகள் தங்களின் உடமைகளை கொண்டு செல்ல பயன்படுத்துவதற்கான கன்வேயர் பெல்ட்டுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர சரக்கு போக்குவரத்தில் (கார்கோ) குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டி விட்டோம். ஒரே நாளில் 21 டன் எடை கொண்ட பொருட்களை கையாளும் திறனுக்கு வளர்ந்து சாதனை புரிந்துள்ளோம். 2011& 2012ம் ஆண்டை விட 2012& 2013ம் ஆண்டின் வளர்ச்சி விகிதம் 40 சதவீதம் அதிக மாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். கார்கோ பிரிவில் சரக்குகளை பதப்படுத்தி வைப்பதற்காக குளிர்சாதன வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வர்த்தகர்களின் நலன்கருதி
கஸ்டம்ஸ் உடன் இணைந்து இடிஐ வசதியை ஏற்படுத்தி தருவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சி ஏர்போர்ட்டினை மேம்படுத்த, அதில் தொடர்புடைய அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு விமானநிலைய இயக்குநர் தர்ம ராஜ் பேசினார். விழாவில் சிஐஎஸ்எப் துணை கமாண் டன்ட் சந்தீப்குமார், ஸ்ரீலங் கன் ஏர்லைன்ஸ் மேலாளர் பீனா ஜெரால்டு உள்ளிட் டோர் கலந்து கொண் டனர்.
திருச்சியிலிருந்து...  

Thanks Dinakaran.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக