அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

2014: வேலைவாய்ப்பு எப்படி இருக்கும்?


ஓஹோவென ஓங்கி வளராவிட்டாலும் அதலபாதாளத்துக்கு சென்றுவிடாமல் ஒரேநிலையில்தான் 2013 முழுக்கவே இருந்திருக்கிறது வேலைவாய்ப்புத் துறை.
இந்தநிலையில் 2014-ல் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என ரான்ஸ்டாட் நிறுவனத்தின் சிஇஓ மூர்த்தி கே உப்பலூரியிடம் கேட்டோம்.

''2014-ல் தொழிற்துறை அடையும் வளர்ச்சியைவிட சேவைத்துறை மிகச் சிறப்பான வளர்ச்சி அடையும் என்று நினைக்கிறோம். எனவே, சேவைத் துறைகளில் எந்தெந்த வேலைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதை மட்டும் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன்.

அனலிட்டிக்ஸ் ப்ரஃபஷனல்ஸ்- டேட்டா சயின்டிஸ்ட்ஸ்!
''கடந்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் டேட்டா அதிவிரைவான வளர்ச்சியை சந்தித்துள்ளது. வரும் ஆண்டில் கிளவுட் சந்தையில் டேட்டா தாக்கத்தின் ஆதிக்கம் அதிகமாகவே இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அதன் வளர்ச்சி உள்ளது. டேட்டாவுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் நிறுவனங்கள் அனலிட்டிக்ஸ் ப்ரஃபஷனல்ஸ் - டேட்டா சயின்டிஸ்டுகளின் நிபுணத்துவத்தைக்கொண்டு புதிய போட்டிகளை உருவாக்க உள்ளன.
ட்ராவல், ஏலம், ஃபேஷன், லைஃப்டைம் மற்றும் ஹோம் நீட்ஸ் துறைகளில் புதிய நிறுவனங்கள் வருகின்றன. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் கேஷ் ஆன் டெலிவரி அளிப்பது முக்கியமான விஷயம். இதனால் இந்தத் துறைகளில் வேலை வாய்ப்பு வளர்ச்சி நன்றாக இருக்கும்.  
மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர்ஸ்!
இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் விற்பனை அதிகரித்து வருவதாலும், நுகர்வோர்களின் வாங்கும் பழக்கங்கள் மாறிவருவதாலும், நிறுவனங்கள் தங்களது பொருட்கள் மற்றும் சேவைகளை மொபைல் அப்ளிகேஷன்கள் மூலமாக அளிப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. இதன்காரணமாக ஐஓஎஸ் (ஆப்பிள்), ஆண்ட்ராய்டு (கூகுள்) மற்றும் விண்டோஸ் (மைக்ரோசாஃப்ட்) நிறுவனங்களில் மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர்களைப் பணியமர்த்துவதில் முதலீடு செய்து வருகின்றன.
இன்னோவேஷன் அண்டு டிசைன் இன்ஜினீயர்!
போட்டி நிறைந்த இந்தக் காலகட்டத்தில் லாபம் ஈட்டுவதற்கு, நிறுவனங்கள் தாங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான முதலீடுகளின் மீது கவனம் செலுத்துகின்றன. பழைமையை அகற்றி புதுமையான டிசைன்களை அறிமுகம் செய்ய ஆர்வத்தோடு இருக்கின்றன. இதனால் இன்னோவேஷன் மற்றும் டிசைன் இன்ஜினீயர்களுக்கான தேவை அதிகரித்திருக்கிறது.  
யூசர் எக்ஸ்பீரியன்ஸ் டிசைனர்ஸ்!
இணையதளங்களில் நிறைய உள்ளடக்கங்களும் தகவல்களும் உருவெடுத்துவரும் நிலையில், அந்தத் தகவல்களும் உள்ளடக்கங்களும் எளியமுறையில் பார்ப்பதற்கு வடிவமைக்கும் யூசர் எக்ஸ்பீரியன்ஸ் டிசைனர்கள் தேவைபடுகின்றனர். இதனால் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் இவர்களை அதிக அளவில் பணி நியமனம் செய்வதைக் காண முடிகிறது.
பேங்கிங் பேக் ஆபீஸ் எக்ஸிக்யூட்டிவ்ஸ் - கோ-ஆர்டினேட்டர்ஸ்!
உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களான ஐ.டி சார்ந்த மையங்கள் மற்றும் வங்கிகளுக்கான பேக் ஆபீஸ்களை அமைப்பதற்கு மிகவும் விரும்பத்தக்க இடமாக இந்தியா கருதப்படுகிறது. இதனால், உலகளாவிய நிறுவனங்கள் நல்ல திறன்கொண்ட எம்பிஏ பட்டதாரிகளை எதிர்பார்க்கின்றன.
பி.ஆர் கன்சல்டன்ட்ஸ்- கம்யூனிகேஷன்ஸ் ஸ்பெஷலிஸ்ட்ஸ்!
விளம்பரச் செலவுகளைக் குறைப்பதற்கும், மக்கள்தொடர்புத் துறையில் முதலீடு செய்து ப்ராண்டை பிரபலப்படுத்துவதில் நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. இதனால், மக்கள் தொடர்புத் துறையில் சிறந்த வேலைவாய்ப்புகள் இருப்பதையும் காணலாம்.
ஃபீல்டு சேல்ஸ் எக்ஸிக்யூட்டிவ்ஸ் ஆபீசர்ஸ்!
நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்துதல் மற்றும் புதிய பகுதிகளில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதால் அனைத்துத் துறைகளிலும் மார்க்கெட்டிங்குக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், இந்தத் துறையில் நல்ல வேலைவாய்ப்புகள் இருக்கலாம்.
மீடியா வேலைவாய்ப்பு!
வலைதளங்கள் ஆய்வு செய்யப்பட்ட, சுவாரஸ்யமான தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்க விரும்புகின்றன. இதனால், எந்த விஷயத்தைப் பற்றியும் சுவைபட எழுதும் எழுத்தாளர்களுக்கான தேவை இப்போது இணையதளங்களில் கணிசமாக அதிகரித்திருக்கிறது''  என்று முடித்தார் மூர்த்தி கே உப்பலூரி.
நம்மிடமுள்ள திறமையை பெருக்கிக்கொள்வதன் மூலம், எந்த வேலைக்கும் தகுதியானவர்களாக நம்மை மாற்றிக்கொள்ள முடியும்.    
- சே.புகழரசி,
படம்: ப.சரவணக்குமார்.

 ஐ.டி துறை: திறமைசாலிகளுக்கே வேலை!
 டீம் லீஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் மூத்த துணைத் தலைவர் ரிதுபர்ண சக்ரபர்த்தியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
''நுகர்பொருள், நுகர்வோர் சாதனங்கள், டெலிகாம், சில்லறை விற்பனை மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி போன்ற துறைகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. எஃப்எம்சிஜி துறையில் நுகர்பொருளின் தேவை அதிகரித்திருக்கும் என்று பலரும் கணிப்பதால், அது 6 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பார்மா மற்றும் ஹெல்த்கேர் துறைகள் மேலும் சிறப்பாகச் செயல்படும் என்றும், உள்கட்டமைப்பு துறைகள் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும், ஐ.டி, ஐ.டி சம்பந்தப்பட்ட துறைகள், உற்பத்தி மற்றும் இன்ஜினீயரிங் துறைகளில் சிறிது தொய்வு இருக்கலாம். ஐ.டி மற்றும் ஐ.டி துறை சார்ந்த நிறுவனங்களின் பிசினஸ் மாடல்களில் மாற்றங்கள் செய்யப்படுவதால், திறமைசாலிகளுக்கு மட்டுமே வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
2014-ல் ஐ.டி துறையில் அதிகளவு ஆட்கள் தேவைபடாது என்ற காரணத்தால் கேம்பஸ் இன்டர்வியூவில் நல்ல திறமைசாலிகளுக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கும். மேலும், ஏற்கெனவே  உள்ள நடுத்தர மற்றும் மூத்த பணியாளர்களுக்கு வளர்ச்சி என்பது மெதுவான வேகத்திலேயே இருக்கும். வேலைவாய்ப்பு குறையும் என்பதாலும், ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு போன்ற காரணங்களுக்காக கடந்த ஆண்டு வேலை செய்த செயல்திறன் மற்றும் வளர்ச்சியைப் பொறுத்தே ஊக்குவிக்கப்படுவார்கள்.  
தமிழகத்தில்...
தமிழ்நாட்டில் நடப்பு காலாண்டில் உற்பத்தி மற்றும் பொறியியல் துறை 3 சதவிகிதம் சரிந்துள்ளது. அதேசமயம், ஐ.டி துறைகளில்கூட வளர்ச்சி குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்கட்டமைப்பு மற்றும் தொலைதொடர்பு துறைகள் வளர்ச்சியடையும். ரீடெயில் மற்றும் எஃப்எம்சிஜி துறைகள் 2 சதவிகிதம் அதிகரிக்கலாம். இதேநிலை வருடம் முழுவதும் தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.டி நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் புதிய பணியாளர்களுக்கு வேலை இல்லாமலும் சம்பளம் கொடுத்து வந்தன. ஆனால், தற்போது நிறுவனங்கள் அதிக செலவைக் கட்டுபடுத்துவதற்காக, தேவையைப் பொறுத்தே வேலைக்குப் பணியாளர்களை எடுக்க இருப்பதால்,  கேம்பஸ் இன்டர்வியூக்கள் குறையலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக