அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

தனித்து அரசியல் களம் கண்டு வெற்றி ஈட்ட முடியுமா ?


இந்தியா போன்ற பல் சமூக மக்கள் வாழும் நாட்டில் எந்த சமூகமும் தனித்து அரசியல் களம் கண்டு வெற்றி ஈட்ட முடியுமா ? அவ்வாறு யாராவது நினைத்தால் அது நிச்சயம் அது பகல் கனவாகவே இருக்க முடியும். விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்காக களமாடிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் , ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட சமூக நீதிக்காவலர் வி பி சிங் அவர்களும் தனித்த வெற்றியை
பெற முடியவில்லை. நாங்கள்தான் விடுதலை வாங்கி கொடுத்தோம் என நீட்டி முழக்கிய காங்கிரஸ் கட்சிக்கு கூட முதல் தேர்தலில் பெரும்பான்மையை சென்னை மாகாணத்தில் பெற முடியவில்லை என்பதும் அன்றைய காங்கிரஸ் முதல்வர் ராஜாஜியின் தூக்கத்தை கெடுத்த இடது சாரிகள் குறித்தும் வரலாற்று ஏடுகள் பதிவு செய்துள்ளன.அவ்வளவு ஏன் நாடு முழுவதும் மக்களை பிளவு படுத்தி நச்சு சிந்தனையை பரப்பி வலுவான
கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ள ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் வாரிசான பாஜக கூட தனித்து வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது. சிறுபான்மையினரின் வலுவான வாக்கு வங்கிகளை தன்னகத்தே கொண்டு இருந்த , திமுக திருனாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கொல்லைப்புற வழியாக பெற்று அதிகாரத்தை சுவைத்த கட்சி கூட தாங்கள் தனித்து சாதிப்போம் என கூறவேயில்லை .ஒன்று சேர்ந்தே சாதிக்க முடியும். இதுவே உண்மை நிலை. இந்த யதார்த்த நிலையைபுரிந்து கொள்ளாமல் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக ம ம க போன்ற ஒடுக்கப்பட்ட அழுத்தப்பட்ட மக்களுக்காக போராடும் கட்சிக்கு அட்வைஸ் செய்கிறோம் பேர்வழி என சில புண்ணிய வான்கள் புறப்பட்டு இருக்கிறார்கள். அந்த நல்லவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நீங்கள் பதிவிடும் செய்தியை அனைவரும் கவனிக்கிறார்கள் என்ற எச்சரிக்கையுடன் பதிவு செய்யுங்கள் .

உங்கள் பதிவுகள் உங்கள் அரசியல் அறியாமையை வெளிப்படுத்தும் விதமாக இருந்து விடக்கூடாது. சிந்தித்து பதிவு செய்யுங்கள்.

சில பேர் போடும் நிலை தகவல்கள் சிறு பிள்ளை தனமாக இருக்கின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக நம்மில் சிலர் போடும் பதிவுகள் மத வாத சக்திகளுக்கு ஆதரவாக மாறி வோட்டுக்கள் எதிர் முகாமுக்கு போய்விடும் நிலையை ஏற்படுத்தி விடகூடாது.
மதவாத சக்திகளை முறியடிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக