அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்…


வேதாரண்யம் அரசு  கலைக்கல்லூரி  மாணவ மாணவிகள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு
இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து போராட்டம்  நடத்தினர் இலங்கை அதிபரை போர்  குற்றவாளியாக அறிவிக்க கோரியும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதற்காக  இப்போராட்டம் நடத்தபடுவதாகவும்  இப்போராட்டத்தின் ஒருங்கினைப்பாளர் வெற்றிவேல் கூறினார் இதன் தொடர்பாக மத்திய,மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரியும் நாங்கள் போராட்டம் நடத்துகின்றோம் அரசின் அலச்சியபோக்கு நீடித்தால் எங்கள் போராட்டம் தொடர் உண்ணாவிரதம் போராட்டமாக மாறிவிடும் நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள் அங்கே சித்தரவதை செய்யப்பட்டு தினமும் கொல்லபடுகின்றனர் அவர்களை மீட்க நாங்கள் உயிர் உள்ளவரை போராடுவோம் இப்போராட்டத்திற்கு பொதுமக்களும் ஆதரவு கொடுக்கவேண்டும் இவ்வாறு வெற்றிசெல்வன் கூறியவாறு இப்போராட்டத்தில் சுமார் 500 மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர் இதனால் போக்குவரத்துக்கு ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது காவல் துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட கோரி கேட்டனர் ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக