அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

கவின்கலைப் படிப்புகள்...


சென்னை மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள அரசு கவின்கலை கல்லூரிகளில் இளநிலைப் பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.


சென்னையில் உள்ள கவின் கலைக் கல்லூரியில் காட்சி தொடர்பு வடிவமைப்பு (விஷுவல் கம்யூனிகேஷன் டிசைன்), வண்ணக்கலை (பெயிண்டிங்), சிற்பக்கலை (ஸ்கல்ப்ச்சர்), சுடுமண் வடிவமைப்பு (இண்டஸ்ட்ரியல் டிசைன் இன் செராமிக்), துகிலியல் வடிவமைப்பு (இண்டஸ்ட்ரியல் டிசைன் இன் டெக்ஸ்டைல்), பதிப்போவியம் (பிரிண்ட் மேக்கிங்) ஆகிய பாடப் பிரிவுகளில் நான்காண்டு இளங்கவின் கலை பட்டப்படிப்பு (பி.எப்.ஏ.) உள்ளது.

கும்பகோணத்தில் உள்ள கவின் கலைக் கல்லூரியில் காட்சி தொடர்பு வடிவமைப்பு (விஷுவல் கம்யூனிகேஷன் டிசைன்), வண்ணக்கலை (பெயிண்டிங்), சிற்பக்கலை (ஸ்கல்ப்ச்சர்) ஆகிய பிரிவுகளில் நான்காண்டு இளங்கவின் கலை பட்டப்படிப்பு (பி.எப்.ஏ.) உள்ளது.

இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி பொதுப்பிரிவினர் 23 வயதுக்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர்கள் 26 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இக்கல்லூரிகளில் முதுகவின் கலை பட்டப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இளங்கவின் கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.50. மற்ற பிரிவினருக்கு ரூ.100. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அந்தந்த கல்லூரி முதல்வரின் பெயரில் மாற்றத்தக்க வகையில் டிமாண்ட் டிராப்ட்  எடுத்து நேரில் செலுத்தியும், தபால் மூலமாகவும் விண்ணப்பங்களைப் பெறலாம். தபால் மூலம் பெற விரும்புவோர், 10 ரூபாய் தபால் தலை ஒட்டிய, சுயமுகவரியிட்ட அஞ்சல் உறையுடன், டிமாண்ட் டிராப்ட்டை இணைத்து அனுப்ப வேண்டும். விரிவான விவரங்களை விண்ணப்பம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 15.06.2014

விவரங்களுக்கு:
முதல்வர், அரசு கவின்கலைக் கல்லூரி,
31. ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை,
பெரியமேடு, சென்னை - 600 003.
தொலைபேசி: 044-25610878

முதல்வர், அரசு கவின்கலை கல்லூரி, சுவாமிமலை முதன்மைச் சாலை,மேலக்காவிரி அஞ்சல், கும்பகோணம் - 612 002,
தொலைபேசி: 0435 - 2481371

மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியில் படிப்புகள்
பல்லவர் காலத்து சிற்பங்களைத் தாங்கி நிற்கும் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு தொழிற்பயிற்சியுடன் கூடிய நான்காண்டு இளநிலைப் பட்டப்படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன. இங்கு மரபு கட்டடக்கலை குறித்து பி.டெக். படிக்கலாம். கற்சிற்பம், சுதைச் சிற்பம், மரச்சிற்பம், உலோகச் சிற்பம் ஆகிய பாரம்பரிய சிற்பக்கலைப் பாடப்பிரிவுகளில் பிஎப்ஏ படிக்கலாம். அத்துடன்,  மரபு ஓவியம் மற்றும் வண்ணம் ஆகிய பாடப்பிரிவுகளில் (டிரெடிஷனல் டிராயிங் அண்ட் பெயிண்டிங்) பிஎப்ஏ படிக்கலாம்.

பிடெக் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் கணிதத்தை முக்கியப் பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டியது அவசியம். பிஎப்ஏ படிப்புகளில் சேர விரும்புவோர் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி பொதுப்பிரிவினர் 21 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மலை ஜாதியினர், பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும். மூன்று படிப்புகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதும்.

பொதுப் பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.50. விண்ணப்பக் கட்டணத்தை திருக்கழுக்குன்றம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மாற்றத்தக்க வகையில், கல்லூரி முதல்வர் பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து, நேரில் கொடுத்தோ அல்லது தபால் மூலம் அனுப்பியோ விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி தேதி: 30.06.2014

தொலைபேசி: 044 - 27442261

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக