அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

கார்ட்டூன், உணவுத் தொழில்நுட்பம். தடய அறிவியல் படிக்க விருப்பமா?

கார்ட்டூன் துறையில் ஆர்வமுள்ளவர்கள் NID Ahmedabad, J.J.School of Arts. IIT Mumbai - Guwahati போன்ற இடங்களில் டிப்ளமோ மற்றும் டிகிரி படிப்புகளில் சேரலாம். டிப்ளமோ படிக்கக் குறைந்தது 12-ம் வகுப்பில் 45% மதிப்பெண்களும், இளங்கலை படிப்பிலும் அதே அளவு மதிப்பெண்களையும் கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும். இதில் முதுகலைப் படிப்பில் இடம் கிடைப்பது குதிரைக் கொம்பு! மும்பை மற்றும் குவாஹத்தியில் மட்டும்தான் முதுகலைப் படிப்பு உண்டு!

ஸ்பேஸ் சயின்ஸ்

ஸ்பேஸ் சயின்ஸ் துறையில் முதுகலைப் பட்டம் பெற ஆர்வமுள்ளோர், இதே துறை அல்லது இந்தத் துறை சம்பந்தமான வேறு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்போர் விண்ணப்பிக்கலாம். புனே பல்கலைக்கழகத்தில் மட்டுமே இந்தத் துறை சம்பந்தமான படிப்புகள் உள்ளன. பட்டயப் படிப்பும் குஜராத் மற்றும் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் மட்டும் உள்ளன!

உணவுத் தொழில்நுட்பம்

'கெமிஸ்ட்ரி, மற்றும் பயோகெமிஸ்ட்ரி அல்லது வேளாண்மை முடித்த மாணவர்கள் முதுகலைப் படிப்பாக, food technology&-ஐத் தேர்ந்தெடுத்தால், உலகில் உள்ள பெரிய பெரிய உணவு உற்பத்தி சம்பந்தமான துறையில் வேலை உறுதி' என்கிறது, மைசூர் உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம். உணவுகளின் கலோரியை அளவிடவும், உணவுத் தரத்தை அளவிடவும் கற்றுத்தருகிறது இந்தப் படிப்பு!

தடய அறிவியல்


தடய அறிவியல் துறையில் சேர விரும்புவோர் லக்னோ பல்கலைக்கழகம், சண்டிகர் மற்றும் கொல்கத்தாவில் உள்ள Central Forensic Science Laboratory ஆகியவற்றில் சேரலாம். எச்சில், முடி, கைரேகை போன்றவற்றை வைத்துக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உதவும் இத்துறையில் பயிற்சி பெற்றோருக்கு காவல் துறை, சட்டம், டிடெக்டிவ் ஏஜென்சீஸ் போன்ற இடங்களில் வேலைக்கு உத்தரவாதம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக