அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

இந்தியாவில் இஸ்லாமிய வங்கி சாத்தியமில்லை: ரிசர்வ் பேங்க் கவர்னர்

இந்தியாவின் மைய வங்கியான ரிசர்வ் பேங்க்கின்  ஆளுநர் டி.சுப்பாராவ் செய்தியாளர்களிடம் "இந்தியாவில், இஸ்லாமிய வங்கி சாத்தியமில்லை" என்று
இந்தியாவின் மைய வங்கியான ரிசர்வ் பேங்க்கின்  ஆளுநர் டி.சுப்பாராவ் செய்தியாளர்களிடம் "இந்தியாவில், இஸ்லாமிய வங்கி சாத்தியமில்லை" என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில் "இஸ்லாமிய வங்கிக் கோரிக்கையின் பின்னிருக்கும் உயர்ந்த நோக்கம் பாராட்டத்தக்கது. ஆனால் அதற்கென்று சட்டத்தை உருவாக்காமல் இஸ்லாமிய வங்கி என்பது சாத்தியமற்றதே; எனினும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நிதியை இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்குட்பட்டு முறைப்படுத்துவது பற்றி யோசிக்கலாம்" என்றும் சொன்னார்.
"இஸ்லாமிய வங்கியியலுக்கு என்று தனிச்சட்டத்தைக் கொண்டுவராமல் அதை நடைமுறைப்படுத்த இயலாது" என்ற ஆர்பிஐ ஆளுநர்,"வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிதியை முறைப்படுத்துவதில் இஸ்லாமிய வங்கிக் கோட்பாடுகள் அடிப்படையில் அமைந்த வேறு ஏதேனும் ஒன்றைப் பற்றி மைய வங்கி சிந்திக்கலாம்" என்று கருத்தளித்தார்.
கடந்த அக்டோபர் மாதம் முதல்வாரம் இஸ்லாமிய வங்கியியலை நடைமுறைக்குக் கொணரத் தேவையான சட்டதிருத்தங்களைச் செய்ய வேண்டி மத்திய அரசுக்கு மத்திய வங்கி கடிதம் எழுதியிருந்தது நினைவிருக்கலாம்.
 

THANKS-INNERAM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக