அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்

கடந்த 10 நாட்களாக அமெரிக்க அடிமை இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள குடியிருப்புகளை நோக்கி 500 க்கும் அதிகமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி குழந்தைகளும், பெண்களும் மட்டுமே 500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

உலக நாடுகளோ, இந்திய அரசோ இதை கண்டு கொள்ளவில்லை.. இந்த போக்கை கண்டித்தும் இஸ்ரேல் தூதரகத்தை இந்தியாவில் இருந்து வெளியேற்ற கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று மாலை 4 மணிக்கு நடத்தியது. தமுமுக தொண்டர்களும் மனிதநேய ஆர்வலர்களும் 500 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். மாநில செயலாளர் நாவலூர் மீரான் அவர்களும், பி.எஸ். ஹமீது அவர்களும், மாநில துணை தலைவர் குணங்குடி ஹனீபா அவர்களும் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள்.மாவட்ட நிர்வாகிகள் கோசங்களை எழுப்ப வட சென்னை மாவட்ட தலைவர் உஸ்மான் அலி, நன்றியுரை நிகழ்த்தினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற தமுமுக தலைவர் ஜே எஸ். ரிபாயி தனது கண்டன உரையில் இறுதி காலத்தில் யூதர்கள் ஓட ஓட விரட்டி அடிக்கப்படுவார்கள். உயிருக்கு பயந்து யூதர்கள் பாறைகளுக்கு , மலைகளுக்கு பின்னால் ஓடி ஒழிந்தாலும் காட்டி கொடுக்கப்படுவார்கள் என்ற நபிமொழியை நினைவூட்டி அந்த காசா பகுதி குழந்தைகள், பெண்களுக்காக நாம் அனைவரும் பிராத்திப்போம் என்று உருக்கமாக கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தென் சென்னை மாவட்ட தலைவர் சீனி முஹம்மது, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் யாகூப், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் காதர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர். ர்ப்பாட்டதிற்கான ஏற்பாடுகளை வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக