அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

சிறந்த மனித மூலதனத்தைக் கொண்ட நாடுகள் வரிசையில் மலேசியா



பெட்டாலிங் ஜெயா, 28 நவம்பர்: உலகிலேயே அதிக நேரம் வேலை செய்யும் மனித மூலதனத்தை மலேசியா கொண்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட 90% விழுக்காட்டினர் விடுமுறை காலங்களிலும் வேலை செய்வதாக அந்த ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.


உலகளாவிய நிலையில், மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுள்ள மனித மூலதனங்களின் வரிசையில் இந்தியா, பிரசில், இத்தாலிக்குப் பின் மலேசியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
விடுமுறை நாட்களில் கூட மலேசியர்கள் தங்கள் வேலையிலிருந்து முற்றிலும் வெளியாவது இல்லை.

உலகளாவிய நிலையில், 22 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், மலேசியர்கள் ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் 40 மணி நேரம் பணியில் ஈடுபடுவதாகவும், ஆண்டுக்கு 14 வருடாந்திர விடுமுறை மட்டுமே எடுத்துக்கொள்வதாகவும் அந்த ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது. ஆண்டுக்கு 14 நாட்கள் என்பது உலகிலேயே மிகவும் குறைவான விடுமுறை நாட்களாகும்.
அதிலும், மலேசியர்கள் தங்கள் விடுமுறையில் 7% விழுக்காட்டை பயன்படுத்திகொள்வதில்லை என்றும் அந்த ஆய்வு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

வருடாந்திர விடுமுறையை மறு ஆண்டுக்கு கொண்டு செல்வதற்காகவும் மட்டுமின்றி, சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்குத் தோதான நாட்கள் கிடைக்காதது போன்ற காரணங்களால் தான் தாங்கள் விடுப்பு எடுத்துக்கொள்வதில்லை என்றும் ஆய்வில் பங்கேற்ற மலேசியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பலர், தாங்கள் விடுமுறைக்குச் செல்வது முதலாளிக்குப் பிடிக்காது என்பதால் தாங்கள் விடுப்பு எடுக்கத் தயங்குவதாகக் கூறுகின்றனர். தொடர்ந்து 15% விழுக்காட்டினர் விடுமுறைக்குச் செல்வது தங்களின் வேலையைப் பெரிதும் பாதிப்பதாகக் கருதுகின்றனர்.

Expedia நிறுவனம் விடுமுறை வாழ்வாதாரமின்மை தொடர்பாக நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக