அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

திருபூண்டியில் விபத்து

    நாகை மாவட்டம் திருப்பூண்டியைச் சேர்ந்த பெண்கள், ஒரு தனியார் பேருந்தில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஆலியூர் சென்றிருந்தனர். திருமணம் முடிந்து திரும்பிய வழியில் காமேஸ்வரம் என்ற ஊர் வழியாக வந்துகொண்டிருந்தபோது பேருந்து அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது குடி போதையுடன் டிரைவர் வண்
டி ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உடனடியாக டிரைவர் தப்பி ஓடி விட்டார். சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். செய்தியை கேள்விப்பட்ட திருப்பூண்டி தமுமுகவினர் ஆம்புலன்சுடன் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் உடனடியாக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 


       விபத்து நடந்து வண்டி கவிழ்ந்ததும் அனைவரும் பெண்களாக இருந்ததால் மீட்பதற்கு ஆட்கள் இல்லை, அதிர்ச்சியில் மயக்கமடைந்து கிடந்தனர். இந்நிலையில் திருமணத்திற்கு சென்றவர்களில் அதிக அளவு நகைகளை அணிந்திருந்தது ஆபத்தகிவிட்டது உடனடியாக மீட்புபணிக்கு வந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் மயக்கமுற்று கிடந்த பெண்களிடமிருந்து நகைகளை திருடிசென்றுள்ளனர், இதன்மதிப்பு 18-பவுனுக்கு அதிகமென்று தெரியவருகின்றது.
 

  மருத்துவமணையில் தற்போது 29 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மற்றவர்கள் முதலுதவிக்கு பின்னர் அனுப்பபட்டுள்ளனர். மருத்துவமணையில் இருப்பவர்களிடமிருந்து நகைகளை கழற்றி அவர்களின் உறவினர்மூலம் வீட்டுக்கு அனுப்புமாறு அறிவுறுத்த பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரும், அமைச்சர் ஜெயபாலும் அங்கு உடனடியாக சென்றனர். 

    தமுமுக மாவட்டத் தலைவர் ஜபருல்லா, மமக மாவட்டச் செயலாளர் முபாரக், பொருளாளர் சதக்கத்துல்லாஹ், துணைச் செயலாளர்கள் ஒ.எஸ்.இப்ராஹிம், சாகுல் மற்றும் நாகை நகர நிர்வாகிகள் ஆகியோரும் உடன் இணைந்து சென்றனர். மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததனால் ஆபத்தில் இருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். செய்தியை கேள்விப் பட்டவுடன் டெல்டா மாவட்டங்களில் பயணத்தில் இருந்த மமக பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி நாகை அரசு மருத்துவமனைக்கு வருகை தந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
 

இதனிடையே தமுமுக தொண்டரணியினர் மருத்துவமனையிலேயே இன்று இரவு முழுக்க தங்க உள்ளனர், காயமடைந்தவர்களை பொரவச்சேரி, மஞ்சகொல்லை, கூதூர், நாகூர், தோப்புத்துறை, நாகை, ஆகிய ஊர்களைசேர்ந்த தமுமுக வினர் நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூறிவருகின்றனர். மருத்துவமனை முழுக்க புர்கா அணிந்த பெண்கள் கூட்டம் கவலையோடு இருப்பதை காணமுடிகிறது.
 

 காயமடைந்தவர்களில் தோப்புத்துறை, கட்டிமேடு ஆகிய ஊர்களை சேர்ந்தவர்களின் உறவினர்கள் அடக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக