அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள் ...!

ஈதுல் அல்ஃஹா எனப்படும் ஹஜ் பெருநாள் நாளையும் , நாளை மறு தினமும் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது .

நபி இப்ராகிம் (அலை) அவர்கள் தம் அருந்தவப்புதல்வர் இஸ்மாயில் (அலை) அவர்களை இறைவனுக்காக பலியிட முயன்று , அந்த இறை சோதனையின் போது ,அந்த நரபலி இறைவனால் தடுக்கப்பட்ட வரலாற்று நிகழ்வை இப்பெருநாள் பின்னணியாக கொண்டிருக்கிறது .

புனித ஜம்-ஜம் நீரின் வரலாறும் இங்கிருந்தே தொடங்குகிறது .

நரபலியை தடுத்து நிறுத்தி, அதற்கு பதிலாக ஆடு , மாடு , ஒட்டகங்களை இறைவனுக்காக பலியிட்டு அந்த இறைச்சிகளை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க செய்கிறது இத்தியாக திருநாள் ...!

பொதுவாக முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களும் 'தான- தர்மங்களை' முன்னிறுத்தும் பண்டிகைகளாக உள்ளன .

நோன்பு பெருநாளின் போது ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மங்களும் , ஏழைகளுக்கு செல்வங்களை பகிர்ந்துடும் 'சதக்கா' வும் முக்கியத்துவம் பெறுகிறது .

ஹஜ் பெருநாளின் போது குர்பான் இறைச்சிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது .

ஆம்..! மகிழ்ச்சியான தருணங்களில் மனிதர்களின் மனதை திறந்து வைக்க கற்றுக் கொடுக்கிறது இஸ்லாம்...!

அன்பு உறவுகளே... இந்நன்னாளில் பல நல்ல பண்புகளை செயல்படுத்திட உறுதி ஏற்போம் ...!

* நமது குடியிருப்புகளில் அல்லது வீதிகளில் வாழும் சகோதர சமுதாய நண்பர்களுக்கு , இனிப்புகளையும் உணவுப் பொருட்களையும் கொடுத்து அனுப்புவோம் .

* நமது உறவினர்களில் உள்ள ஏழைகளுக்கு , அவர்களின் சுயமரியாதை கெடாத வகையில் ,அவர்களின் தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்வோம் .

இறைவன் இத்திருநாளில் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் , அமைதியையும் தர பிரார்த்திப்போம் ...!

வாழ்த்துக்கள்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக