அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

குர்­பா­னிக்­காக சென்­னைக்கு வரும் ஒட்­ட­கங்கள்: களைகட்டும் ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாட்டங்கள்

சென்னை : பக்ரீத் பண்­டி­கை­யை­யொட்டி, இந்­தாண்டு, 100 ஒட்­ட­கங்கள் வரை, குர்­பா­னிக்­காக சென்­னைக்கு கொண்டு வரப்­பட உள்­ளன.முஸ்­லிம்­களின் ஈகைத் திரு­நா­ளான, பக்ரீத் பண்­டிகை, வரும், 16ம் தேதி கொண்­டா­டப்­பட உள்­ளது. இதற்­காக, ராஜஸ்­தானில் இருந்து, சென்­னைக்கு, 10 ஒட்­ட­கங்கள் நேற்று கொண்டு வரப்­பட்­டன.


தெலுங்­கானா போராட்­டத்தால் ஆந்­திரா வழி­யாக
ஒட்­டகம் கொண்டு வரு­வதில் சிக்கல் ஏற்­பட்டு உள்­ளதால், இந்­தாண்டு, ஒட்­டக கறி விலை, ஒரு மடங்கு உயரும் என, வண்­ணா­ரப்­பேட்­டையை சேர்ந்த தாஹா மற்றும் அப்துல் ஹமீது தெரி­வித்­தனர்.

மேலும், அவர்கள் கூறி­ய­தா­வது:கடந்­தாண்டு, ஒரு ஒட்­டகம், 35 ஆயிரம் ரூபாய் வரை விற்­கப்­பட்­டது. இந்­தாண்டு, 50 முதல், 65 ஆயிரம் ரூபாய் வரை அதி­க­ரித்­துள்­ளது. தெலுங்­கானா போரட்டம் மற்றும் டீசல் விலை உயர்வால், ராஜஸ்­தானில் இருந்து ஆந்­திரா வழி­யாக சென்­னைக்கு ஒட்­ட­கங்­களை கொண்டு வரு­வதில் சிரமம் நில­வி­யது.தற்­போது, நாங்கள், 10 ஒட்­ட­கங்­களை குர்­பா­னிக்­காக கொண்­டு­வந்­துள்ளோம். இஸ்­லா­மிய மர­பு­படி, ஏழு வயது பூர்த்­தி­ய­டைந்த, குர்­பா­னிக்­காக வளர்க்­கப்­படும் ஆடு, மாடு மற்றும் ஒட்­ட­கத்தை மட்­டுமே குர்­பானி கொடுப்போம். இவ்­வாறு, அவர்கள் கூறினர்.

source Dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக