அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

பிளஸ் டூ ஸ்பெஷல் : தேர்வு நேரம் - மாணவர்களை தயார்படுத்துவது எப்படி?

தேர்வு நேரத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை குறித்து பெற்றோர்களுக்கு பல சந்தேகங்கள் எழுவதுண்டு. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய செகண்டரி கல்வி போர்டு நிபுணர்கள் அளித்துள்ள விளக்கங்கள் இதோ...


தேர்வு நெருங்கும் நேரத்தில் பெற்றோர்களுக்கு என்ன ஆலோசனை சொல்ல விரும்புகிறீர்கள்?
  • மாணவர்களின் திறமை மற்றும் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு யதார்த்தமான எதிர்பார்ப்பை வைத்துக் கொள்வது நல்லது.
  • தொலைக்காட்சி பார்த்தல், விளையாடுதல், படம் வரைதல் போன்று மாணவர்களின் பொழுது போக்கு நடவடிக்கைகளை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டாம்.
  • குறை சொல்லிக்கொண்டே இருப்பதைத் தவிர்க்கவும்.
  • அன்புடன் அவர்களது கடமைகளை நினைவுபடுத்துங்கள்.
  • சரியான நேரத்தில் தூங்குவதையும் உடற்பயிற்சி செய்வதையும் ஊக்கப்படுத்தவும்.
  • இந்த முக்கியமான நேரத்தில் அவர்களை அரவணைத்து அவர்களுக்கு ஏற்ற சாதகமான சூழ்நிலையை வீட்டில் ஏற்படுத்தவும்.
  • மாணவர்களின் பலத்தை எடுத்துக்காட்டுங்கள்.
  • கடந்த காலத்தில் தோல்விகள் ஏற்பட்டிருந்தால் அதிலிருந்து விடுபட்டு முன்னேறிச் செல்ல ஊக்கம் கொடுக்கவும்.
  • மற்ற மாணவர்களுடனும் அவர்களது  சாதனைகளுடனும் உங்களது குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்தவும்.
  • தேர்வு நேரத்தில் மாணவர்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நடந்துகொள்வது இயற்கையானதுதான் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.
  • தேர்வுக்கு முந்தைய நாட்களில் மாணவர்கள், தாங்கள் படித்தது மறந்து போய் விட்டது என்றால் அதற்காகப் பதற்றப்பட வேண்டாம்.
  • மீண்டும் அமைதியாக சிந்தித்துப் பார்த்தால், படித்ததெல்லாம் ஞாபகத்துக்கு வந்து விடும் என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்.
  • உன்னால் முடிந்தவரை சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யவும்.
  • பாடங்களில் சந்தேகங்கள் இருந்தால், ஆசிரியர்களிடம் விளக்கம் பெறச் சொல்லுங்கள்.
  • தேர்வு குறித்த பயங்கள் இருந்தால் ஆசிரியர்களிடம் பேசினால் நம்பிக்கை வரும்.
  • தேர்வு நேரங்களில் ஒரு நாளில் 15-லிருந்து 30 நிமிடங்கள் வரை அவர்களுடன் செலவிட்டு ஜாலியாகப் பேசி உற்சாகப்படுத்துங்கள்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக