அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

மாணவர் இந்தியா: மாற்று சிந்தனைகளுக்கான களம்!


எம். தமிமுன் அன்சாரி
கடந்த 30.01.2014 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான ‘மாணவர் இந்தியா’வின் சார்பில் சிறப்பானதொரு கருத்தரங்கம் நடைபெற்றது. காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட தினமான அன்று, காந்தியின் படுகொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மைகளை அம்பலப்படுத்தும் வகையில் அங்கே உறைவீச்சுகள் அமைந்திருந்தன.


நானும், மாநில செயற்குழு உறுப்பினர் என். தைமிய்யா அவர்களும், திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களும், தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் தம்பிகள் இளையராஜா, அருள்மொழி வர்மன் ஆகியோரும் உரையாற்றினோம். நிகழ்ச்சியை ‘மாணவர் இந்தியா’வின் மாநிலச் செயலாளர் தம்பி அனீஸ் தொகுத்து வழங்கினார்.

பல்வேறு தரப்பட்டவர்களும் பங்கேற்றிருந்த அந்த அரங்கில் காந்தியின் படுகொலைக்குப் பின்னால் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் சதி, தீவிர பார்ப்பனீயத்தின் பங்கேற்புகள் என பல விவகாரங்கள் விரிவாக அலசப்பட்டன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

நிறைவாகப் பேசிய கி.வீரமணி அவர்கள் அனைவரின் பேச்சுக்களையும் சிலாகித்துப் பாராட்டியதோடு மட்டுமின்றி, இதுபோன்ற நிகழ்ச்சிகளை இளைய தலைமுறையினர் அதிகமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

மாணவர் இந்தியாவின் நிகழ்வானது அனைவருக்கும் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. பாசிச எதிர்ப்பு, சாதீய எதிர்ப்பு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, மனித உரிமைப் பாதுகாப்பு, வரலாற்று ஆய்வு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என பல்வேறு களங்களில் மாணவர் இந்தியா பணியாற்றப் புறப்பட்டிருக்கிறது. கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மட்டுமின்றி நகரங்கள், கிராமங்கள் என பல இடங்களிலும் மாணவர் இந்தியா கட்டமைக்கப்பட வேண்டும். காரணம் இது அடுத்த தலைமுறைக்கான இயக்கம்.

தமுமுகவின் மாணவர் அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் முன்னோடிகள் பலரும் இன்று பல்வேறு பணிகளில் சிறப்பாகப் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது தம்பி மருத்துவர் சர்வத் கான் அதை வழிநடத்தி வருகிறார். அதற்கென்று சில கொள்கைகள், இலக்குகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதுபோல மாணவர் இந்தியா வெகுஜன களத்தில், அனைத்துத் தரப்பு மாணவர்களையும் இணைத்து களமாட புறப்பட்டிருக்கிறது. அதன் பணிகள் சிறக்க வாழ்த்துவோம்.

மாணவர் இந்தியா தொடர்புக்கு
புதுமடம் அனீஸ் (9840186823)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக