அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

'ஓட்டுக்கு பணம் கொடுத்தால் தேர்தல் ஆணைய மின்னஞ்சலில் தெரியப்படுத்தலாம்!'



சென்னை: ஓட்டுக்கு பணம் கொடுப்பது தெரிந்தால், தேர்தல் ஆணைய இணையதள முகவரிக்கோ, மின்னஞ்சலுக்கோ தெரியப்படுத்தலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறும்போது, ''வாக்களிப்பது நமது கடமையும், உரிமையும் ஆகும். அதை பணத்திற்கு விற்கக்கூடாது. ஆயிரம் ரூபாய்க்காக 5 வருடம் எதிர்காலத்தை விற்று விடாதீர்கள். உங்கள் உரிமைக்காக நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால், பின்னர் யார் தான் ஓட்டு போடுவார்கள்?.

பணம் வாங்கிவிட்டால் அரசியல்வாதிகளுக்கும், உங்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஆகிவிடுகிறது. நீங்களும் அவர்களுடன் சேர்ந்து கணக்கு கொடுக்க வேண்டும். ஓட்டுக்கு பணம் வாங்குவது குற்றம். நாம் பணம் வாங்காமல் ஓட்டுப்போட்டால் நம் இஷ்டப்படி ஓட்டுப்போடலாம். ஒவ்வொரு முறையும் இதை சொல்லத்தான் செய்கிறோம். ஆனால் இந்த முறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பது பற்றிய தகவல் கிடைத்தாலும், அந்த இடத்திற்கு நாங்கள் செல்வதற்குள் அவர்கள் அங்கிருந்து போய்விடுகிறார்கள். ஆனால் இந்த முறை அதற்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

பொதுமக்கள் அனைவரது கையிலும் கேமரா செல்போன் இருக்கிறது. ஆகவே உங்களிடம் யாராவது ஓட்டுக்கு பணம் கொடுக்க வந்தாலோ அல்லது உங்கள் முன்னால் யாருக்காவது பணம் கொடுத்தாலோ அதை படம் எடுத்து எங்கள் இணையதள முகவரிக்கும், மின்னஞ்சலுக்கும் தெரியப்படுத்தலாம். இதற்கான மின்னஞ்சல் மற்றும் இணையதள முகவரியை விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரியப்படுத்துவோம்'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக