அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தோப்புத்துறை நியூஸ்.காம் உங்களை அன்புடன் வரவேற்கிறது... உலகெங்கும் வாழும் தோப்புத்துறை சொந்தங்களே உங்கள் வாழிட நிகழ்வுகள் மற்றும் கருத்துக்களை msfthopputhurai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பினால் அவை நமது இனையதளத்தில் பதிவுசெய்யப்படும். எல்லா புகழும் இறைவனுக்கே.

களைகட்டியது சீசன் : கோடியக்கரை சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிகின்றன


நாகைமாவட்டம் கோடியக்கரை சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வெளிநாடுகளிலிருந்து வந்து செல்லும் பறவைகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளது
. நாகை மாவட்டம் கோடியக்கரை சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் வெளிநாடுகளிலிருந்து வந்து செல்லும் பறவைகளின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளது.

வேதாரண்யத்தை அடுத்துள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு, ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் ஆயிரக்கணக்கான பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்து செல்வது வழக்கம்.
ஐரோப்பா, சைபீரியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தும் 247 பறவை இனங்கள் இங்கு வந்து செல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வேதாரண்யத்தில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்பு, மழை குறைவு, இரை தட்டுப்பாடு போன்ற காரணங்களால் ஆண்டுக்கு ஆண்டு பறவைகளின் வருகை படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்த ஆண்டு பறவைகள் வருவது வழக்கம்போல தொடங்கினாலும் பருவமழை பின்னடைவால் பறவைகளின் வருகை பெயரளவுக்கே இருந்தது
இந்நிலையில், கடந்த ஓரிரு நாள்களாக பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. பூநாரை, கூழக்கிடா, செங்கால் நாரை இனம், கடல் காகம், மெலிந்த மூக்கு காடல் காகம், கடல் ஆலாக்கள், சிறவி இனப் பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்துள்ளன.

பறவைகள் சரணாலயத்தில் வழக்கமாக காணப்படும் முனியப்பன் ஏரி உள்ளிட்ட இடங்களில் பருவ மழை குறைவால் தண்ணீர் இல்லை. எனவே, சற்று தொலைவில் உள்ள பம்செட், கோவைத்தீவு போன்ற இடங்களில் பறவைகளை காணமுடிகிறது என இங்கு ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தின் பறவையியல் விஞ்ஞானி டாக்டர் எஸ். பாலச்சந்திரன் கூறினார்.

மேலும், கடந்த சில நாள்களாக காலைவேளையில், கோடியக்கரை கடலோரத்தில் உள்ள பம்செட் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூ நாரைகள் மற்றும் செங்கால் நாரைகளின் கூட்டத்தை காணமுடிந்ததாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக